சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கனிமொழி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Added : செப் 09, 2021
Share
Advertisement
விழுப்புரம்-கனிமொழி எம்.பி., மீதான அவதுாறு வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் கடந்த 2018ம் ஆண்டு ஆக., 18 ம் தேதி, அ.தி.மு.க., ஆட்சியை கண்டித்து தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திண்டிவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., பங்கேற்றார்.அப்போது முதல்வராக

விழுப்புரம்-கனிமொழி எம்.பி., மீதான அவதுாறு வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் கடந்த 2018ம் ஆண்டு ஆக., 18 ம் தேதி, அ.தி.மு.க., ஆட்சியை கண்டித்து தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திண்டிவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., பங்கேற்றார்.அப்போது முதல்வராக இருந்த பழனிசாமி பற்றி அவர் அவதுாறாக பேசியதாக கூறி, மாவட்ட அரசு வழக்கறிஞர் சீனிவாசன், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நேற்று வந்தது. இதில் கனிமொழி எம்.பி., ஆஜராகவில்லை. அவரது சார்பில் தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆஜராகி இவ்வழக்கில் கனிமொழி எம்.பி., ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதாக கூறி, மனுதாக்கல் செய்தனர்.இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X