சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு வழக்கு;பெங்களூருவை சேர்ந்த 2 பேர் கைது

Added : செப் 09, 2021
Share
Advertisement
கண்டமங்கலம்-கண்டமங்கலம் அருகே, வைத்தியம் செய்வதாக கூறி மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற பெங்களூருவை சேர்ந்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கண்டமங்கலம் அடுத்த பெரியபாபுசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் அய்யனாரப்பன் 39; டெய்லர். பக்கவாத நோயால் பாதித்தவர். இவரை கோரைக்கோணியை சேர்ந்த அவரது அத்தை சுந்தராம்பாள், 77; கவனித்து வந்தார்.கடந்த 5ம் தேதி காலை

கண்டமங்கலம்-கண்டமங்கலம் அருகே, வைத்தியம் செய்வதாக கூறி மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற பெங்களூருவை சேர்ந்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கண்டமங்கலம் அடுத்த பெரியபாபுசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் அய்யனாரப்பன் 39; டெய்லர். பக்கவாத நோயால் பாதித்தவர். இவரை கோரைக்கோணியை சேர்ந்த அவரது அத்தை சுந்தராம்பாள், 77; கவனித்து வந்தார்.கடந்த 5ம் தேதி காலை பைக்கில் வந்த வாலிபர்கள் தாங்கள் நாட்டு வைத்தியர் எனவும், அய்யனாரப்பனுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் கூறினர். சுந்தராம்பாளுக்கும் உடல் வலி நீங்க எண்ணை தேய்த்து, அவர் அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.புகாரின்பேரில் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி வழக்குப் பதிந்து விசாரித்தார். தொடர்ந்து, நவமால்மருதுார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியே பைக்கில் வந்த இரண்டு வாலிபர்களை மடக்கி, விசாரித்தனர். அவர்கள் கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே பட்லாகாலி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் மணி, 26; ஆதிமூர்த்தி மகன் கோபி, 26, என்பதும், சுந்தராம்பாளின் நகையை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 சவரன் செயின் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். அவர்களை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X