மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது | Dinamalar

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Added : செப் 09, 2021
Share
புதுச்சேரி-புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய மரக்காணம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை

புதுச்சேரி-புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய மரக்காணம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார்விசாரித்தனர்.மோட்டார் சைக்கிளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. சந்தேகமடைந்த போலீசார் வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.மரக்காணம் ஆலத்துார் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் திலீப்(எ) ஆனந்த், 30; என்பது தெரிய வந்தது. அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் புதுச்சேரியில் திருடப்பட்டது என்பதும் தெரிந்தது.இதைத் தொடர்ந்து, ஆனந்த் கொடுத்த தகவலின்பேரில், பல்வேறு இடங்களில் திருடி அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X