பொது செய்தி

இந்தியா

குப்பையில் வீசிய காகிதங்கள் விநாயகர் சிலையாக வடிவமைப்பு

Added : செப் 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி-அரசு பள்ளியில் குப்பையில் துாக்கி எறியப்பட்ட காகிதங்கள், விநாயகர் சிலைகளாக மாறி வீடுகளை அலங்கரிக்க உள்ளன.புதுச்சேரி இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நுண் கலை விரிவுரையாளராக பணியாற்றுபவர் கிருஷ்ணன்,46.இவர், பள்ளியில் மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு குப்பையில் வீசப்பட்ட காகிதங்களை விநாயகர் சிலைகளாக மாற்றி உள்ளார்.நேற்று திலாசுபேட்டையில் உள்ள

புதுச்சேரி-அரசு பள்ளியில் குப்பையில் துாக்கி எறியப்பட்ட காகிதங்கள், விநாயகர் சிலைகளாக மாறி வீடுகளை அலங்கரிக்க உள்ளன.புதுச்சேரி இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நுண் கலை விரிவுரையாளராக பணியாற்றுபவர் கிருஷ்ணன்,46.இவர், பள்ளியில் மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு குப்பையில் வீசப்பட்ட காகிதங்களை விநாயகர் சிலைகளாக மாற்றி உள்ளார்.நேற்று திலாசுபேட்டையில் உள்ள அவரது வீ்ட்டில் அதற்கான பயிற்சி முகாமை நடத்தினார். இதில் 20 மாணவர்கள் பங்கேற்று, விநாயகர் சிலைகளை வடிவமைக்க பயிற்சி பெற்றனர். காகித விநாயகர் சிலைகளை வடிவமைத்து வீடுகளில் வைத்து வழிபட எடுத்து சென்றனர்.நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணன் கூறியதாவது:பள்ளியில் மாணவர்கள் துாக்கி எறியும் காகித குப்பைகளை பயனுள்ள வகையில் மறுசுழற்சி முறையில் பயன்படுத்த முடிவு செய்தோம். விநாயகர் சதுர்த்தியையொட்டி, அந்த காகிதங்களை பயன்படுத்தி விநாயகர் சிலைகளை வடிவமைக்க திட்டமிட்டோம். பள்ளி முதல்வர் கேசவ் நல்ல முயற்சி என்று பாராட்டினார். விருப்பம் உள்ள மாணவர்களுக்கு காகித விநாயகர் சிலை அமைக்க பயற்சி அளிக்கப்பட்டது. விரைவாக கற்றுக்கொண்ட மாணவர்கள், காகித விநாயகர் சிலைகளை செய்து, வீடுகளுக்கு வழிபாட்டிற்காக கொண்டு சென்றுள்ளனர் என்றார் .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X