மேம்பாலத்தில் விபத்து

Added : செப் 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி -நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில் அகற்றப்படாமல் இருந்த பேரிகார்டில் பைக் மோதியதில் இருவர் பலத்த காயமடைந்தனர்.புதுச்சேரி நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில், சேதமான சாலையை சில நாட்களுக்கு முன் சீரமைத்தனர். அப்பகுதியில் வாகனங்கள் செல்வதை தடுக்க, எச்சரிக்கைக்காக பேரிகார்டு வைக்கப்பட்டது. சாலை சரியான பிறகு, பேரிகார்டை அகற்றாமல், மேம்பாலத்திலேயே ஓரமாகப்

புதுச்சேரி -நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில் அகற்றப்படாமல் இருந்த பேரிகார்டில் பைக் மோதியதில் இருவர் பலத்த காயமடைந்தனர்.புதுச்சேரி நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில், சேதமான சாலையை சில நாட்களுக்கு முன் சீரமைத்தனர். அப்பகுதியில் வாகனங்கள் செல்வதை தடுக்க, எச்சரிக்கைக்காக பேரிகார்டு வைக்கப்பட்டது. சாலை சரியான பிறகு, பேரிகார்டை அகற்றாமல், மேம்பாலத்திலேயே ஓரமாகப் போட்டு வைத்துள்ளனர்.இந்நிலையில், நேற்று இரவு பைக்கில் சென்ற இருவர், பேரிகார்டு இருப்பதை அறியாமல் அதன் மீது மோதினர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X