பொது செய்தி

இந்தியா

குப்பை வரியில் சலுகை வழங்க மண்டப உரிமையாளர்கள் கோரிக்கை

Added : செப் 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி-திருமண மண்டபங்களுக்கு குப்பை வரியில் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.புதுச்சேரி திருமண மண்டப உரிமையாளர் நலச்சங்க தலைவர் இசைக்கலைவன், முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு;புதுச்சேரியில் கொரோனா காலத்தில் பல்வேறு பிரிவினருக்கு பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பினை கருத்தில் கொண்டு, கடன்களை தள்ளுபடி செய்து வரியில்லா

புதுச்சேரி-திருமண மண்டபங்களுக்கு குப்பை வரியில் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.புதுச்சேரி திருமண மண்டப உரிமையாளர் நலச்சங்க தலைவர் இசைக்கலைவன், முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு;புதுச்சேரியில் கொரோனா காலத்தில் பல்வேறு பிரிவினருக்கு பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பினை கருத்தில் கொண்டு, கடன்களை தள்ளுபடி செய்து வரியில்லா பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.கடந்த ஆட்சியில் விதிக்கப்பட்ட குப்பை வரி, பாதாள சாக்கடை வரி, மின்சார கட்டண உயர்வால் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது சரியான மாற்றமாகும்.கொரோனா காலத்தில் திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்களில் நகராட்சி மூலம் குப்பைகள் அகற்றும் பணி தடைபட்டது. அதனால், முழுமையாக குப்பை வரியை வசூலிக்காமல், சலுகை வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை பரிசீலித்து, வணிகர் நலன் காக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளுக்கு குப்பை வரி ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X