அமைச்சர் நமச்சிவாயத்திற்கு மோடி மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமைச்சர் நமச்சிவாயத்திற்கு மோடி மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து

Added : செப் 09, 2021
Share
புதுச்சேரி-பிறந்த நாள் விழா கொண்டாடிய அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தனது 52வது பிறந்த நாளை கொண்டாடினார். தனது குடும்பத்தினருடன் கோ பூஜை செய்தார். மணக்குள விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தார்.அமைச்சர் நமச்சிவாயத்தை பிரதமர் நரேந்திர மோடி போனில்

புதுச்சேரி-பிறந்த நாள் விழா கொண்டாடிய அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தனது 52வது பிறந்த நாளை கொண்டாடினார். தனது குடும்பத்தினருடன் கோ பூஜை செய்தார். மணக்குள விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தார்.அமைச்சர் நமச்சிவாயத்தை பிரதமர் நரேந்திர மோடி போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால், இணை அமைச்சர் கிஷன்ரெட்டி, மத்திய அமைச்சர்கள் ராஜூ சந்திரசேகர், முருகன், பிரகலாத்சிங் ஆகியோர் போனில் தொடர்பு கொண்டு நமச்சிவாயத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.மிசோரம் கவர்னர் இல.கணேசன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, புதுச்சேரி பா.ஜ., பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, தமிழக எம்.எல்.ஏ.,க்கள் வானதி சீனிவாசன், நயினார்நாகேந்திரன் உள்ளிட்டோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X