கஞ்சா விற்ற இருவர் கைது

Added : செப் 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி-மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.கோரிமேடு போலீஸ் சப்--இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் கனரக போக்குவரத்து முனையம் அருகே வாகன சோதனை நடத்தினர்.அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை பிடித்து சோதனை செய்தனர். இருவரிடமும் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது

புதுச்சேரி-மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.கோரிமேடு போலீஸ் சப்--இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் கனரக போக்குவரத்து முனையம் அருகே வாகன சோதனை நடத்தினர்.அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை பிடித்து சோதனை செய்தனர். இருவரிடமும் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், திலாஸ்பேட்டை மணிகண்டன், 23; வில்லியனுார் வி.மணவெளியை சேர்ந்த திருமுருகன், 19; என்பது தெரிய வந்தது.மணிகண்டன் அளித்த தகவலின்பேரில், அவரது வீட்டில் இருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.கஞ்சா விற்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X