புதுச்சேரியில் 11ம் தேதி லோக் அதாலத் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் 11ம் தேதி லோக் அதாலத்

Added : செப் 09, 2021
Share
புதுச்சேரி-புதுச்சேரி நீதிமன்றத்தில், வரும் 11ம் தேதி லோக் அதாலத் நடக்கிறது.இதுகுறித்து சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரான மாவட்ட நீதிபதி சோபனாதேவி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:தேசிய சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரான உச்ச நீதிமன்ற நீதிபதி லலித் உத்தரவின்பேரில், நாடு முழுவதும் வரும் 11ம் தேதி லோக் அதாலத் நடைபெறுகிறது.அதன்படி, புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய

புதுச்சேரி-புதுச்சேரி நீதிமன்றத்தில், வரும் 11ம் தேதி லோக் அதாலத் நடக்கிறது.இதுகுறித்து சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரான மாவட்ட நீதிபதி சோபனாதேவி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:தேசிய சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரான உச்ச நீதிமன்ற நீதிபதி லலித் உத்தரவின்பேரில், நாடு முழுவதும் வரும் 11ம் தேதி லோக் அதாலத் நடைபெறுகிறது.அதன்படி, புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் வழிகாட்டுதலில், வரும் 11ம் தேதி புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றம், காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாகி, ஏனாம் நீதிமன்றங்களில் லோக் அதாலத் நடக்கிறது.இதில், சமாதானமாகக் கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், ஜீவனாம்சம், குடும்ப நீதிமன்ற வழக்குகள், உரிமையியல் வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள் விசாரித்து தீர்வு காணப்பட உள்ளது.புதுச்சேரியில் நடைபெறும் லோக் அதாலத்தில், மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினரான நீதிபதி சோபனாதேவி, புதுச்சேரி தலைமை நீதிபதி செல்வநாதன், முதன்மை சார்பு நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X