பொது செய்தி

தமிழ்நாடு

வாலிபால் போட்டி கெங்கரை அணி வெற்றி

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோத்தகிரி : கோத்தகிரி அருகே, நடந்த மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், கெங்கரை அணி வெற்றி பெற்றது.கீழ் கோத்தகிரி ஒசஹட்டி என்.எஸ், குள்ளா கவுடர் நினைவு மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி, ஒசஹட்டி மைதானத்தில் நடந்தது. ஒசஹட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடந்த போட்டி தொடரில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 25 அணிகள் பங்கேற்கின்றன.இறுதிப்போட்டி, கெங்கரை மற்றும்

கோத்தகிரி : கோத்தகிரி அருகே, நடந்த மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், கெங்கரை அணி வெற்றி பெற்றது.கீழ் கோத்தகிரி ஒசஹட்டி என்.எஸ், குள்ளா கவுடர் நினைவு மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி, ஒசஹட்டி மைதானத்தில் நடந்தது.

ஒசஹட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடந்த போட்டி தொடரில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 25 அணிகள் பங்கேற்கின்றன.இறுதிப்போட்டி, கெங்கரை மற்றும் ஒசஹட்டி அணிகளுக்கு இடையே நடந்தது. இதில், கெங்கரை அணி, 25; 20 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், குள்ளா கவுடர் நினைவாக, அவரது குடும்பத்தை சேர்ந்த சிவ சாய்ராம், வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கினார். இதில், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X