பொது செய்தி

தமிழ்நாடு

'மூச்சு முட்டிய' தேசிய நெடுஞ்சாலை

Added : செப் 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பல்லடம் : பல்லடம் என்.ெஹச்., ரோட்டில், சாதாரண நாட்களை காட்டிலும், பண்டிகை, மற்றும் விசேஷ நாட்களில், கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. முகூர்த்த நாளான நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பனப்பாளையம் முதல் அண்ணா நகர் வரை, இடைவெளியின்றி வாகனங்கள் அணிவகுத்து நின்றன. என்.ெஹச்., ரோட்டில்தான் இந்த நிலை என்றால், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,

பல்லடம் : பல்லடம் என்.ெஹச்., ரோட்டில், சாதாரண நாட்களை காட்டிலும், பண்டிகை, மற்றும் விசேஷ நாட்களில், கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. முகூர்த்த நாளான நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பனப்பாளையம் முதல் அண்ணா நகர் வரை, இடைவெளியின்றி வாகனங்கள் அணிவகுத்து நின்றன. என்.ெஹச்., ரோட்டில்தான் இந்த நிலை என்றால், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி என, அனைத்து ரோடுகளும் வாகனங்களால் நிரம்பி வழிந்தன. உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்களும், நெரிசலில் சிக்கி தத்தளித்தபடி தாமதமாக சென்றன. போக்குவரத்து போலீசாரும் செய்வதறியாமல் திணறினர். பல்லடம் நகரை கடந்து செல்ல, அரை மணி நேரத்துக்கு மேல் ஆனதால், வாகன ஓட்டிகள் விரக்தியின் உச்சத்துக்கு சென்றனர். தொழில், வியாபாரத்துக்காக செல்லும் உள்ளூர்வாசிகள் என்றுதான் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமோ என புலம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manivannan - Avinashi,இந்தியா
09-செப்-202109:45:31 IST Report Abuse
Manivannan கார்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு கால நிர்ணயம் செய்து பழைய வாகனங்களை ஒழித்தால் இப்பிரச்சினை குறையும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X