பொது செய்தி

இந்தியா

உயர்த்தப்பட்ட உதவித்தொகை

Added : செப் 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி-மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை, அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற ரங்கசாமி, முதியோர் உதவித் தொகையை ரூ.500 உயர்த்தி வழங்க உத்தரவிட்டார். இந்த உயர்த்தப்பட்ட உதவித் தொகை கடந்த மாதம் முதல் மகளிர் மேம்பாட்டு துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளும், தங்களுக்கான உதவித் தொகையை

புதுச்சேரி-மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை, அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற ரங்கசாமி, முதியோர் உதவித் தொகையை ரூ.500 உயர்த்தி வழங்க உத்தரவிட்டார். இந்த உயர்த்தப்பட்ட உதவித் தொகை கடந்த மாதம் முதல் மகளிர் மேம்பாட்டு துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளும், தங்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்கிட கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று, மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.500 உயர்த்தி வழங்கிட முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.அதனையொட்டி, சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்த்தி இன்று முதல் வழங்கப்படும் என அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.அதன்படி 40 முதல் 65 சதவீதம் ஊனமுள்ளவர்களுக்கு ரூ.1,500ல் இருந்து 2,000 ஆகவும், 66 முதல் 85 சதவீதம் வரை ஊனமுள்ளவர்களுக்கு ரூ.2,000ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.86 முதல் 100 சதவீதம் ஊனமுள்ளவர்களுக்கு ரூ.3,000ல் இருந்து 3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 60 முதல் 79 வயது உள்ளவர்களுக்கு ரூ.2,200ல் இருந்து ரூ.2,700 ஆகவும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.3,300ல் இருந்து ரூ.3,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.உயர்த்தப்பட்ட தொகையுடன் கூடிய உதவித் தொகை, 20 ஆயிரத்து 952 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. பயனாளிகள் இன்று 9ம் தேதி முதல் தங்கள் வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X