பொது செய்தி

தமிழ்நாடு

திருவனந்தபுரம் - மதுரை ரயில் படுக்கை பெட்டிகள் குறைப்பு

Added : செப் 09, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : திருவனந்தபுரம் - மதுரை இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயிலில், படுக்கை வசதியுள்ள இரண்டு பெட்டிகளை குறைப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவனந்தபுரம் - மதுரை இடையே, பொள்ளாச்சி வழியாக அமிர்தா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயிலில், 16 பெட்டிகள் உள்ளன. படுக்கை வசதியுள்ள பெட்டிகளில் பயணிகள் வருகை குறைவு என கூறி, இரண்டு பெட்டிகளை

பொள்ளாச்சி : திருவனந்தபுரம் - மதுரை இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயிலில், படுக்கை வசதியுள்ள இரண்டு பெட்டிகளை குறைப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவனந்தபுரம் - மதுரை இடையே, பொள்ளாச்சி வழியாக அமிர்தா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலில், 16 பெட்டிகள் உள்ளன. படுக்கை வசதியுள்ள பெட்டிகளில் பயணிகள் வருகை குறைவு என கூறி, இரண்டு பெட்டிகளை குறைப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மதுரை மண்டல ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சண்முகசந்தரம் கூறியதாவது:திருவனந்தபுரத்தில் இருந்து வரும் ரயில், காலை, 6:00 மணிக்கு பொள்ளாச்சியில் புறப்பட்டு, பகல் நேரத்தில் தான் மதுரை செல்கிறது. மதுரையில் இருந்தும் பொள்ளாச்சி வரை பகல் நேரத்தில் தான் இயங்குகிறது.படுக்கை வசதி பெட்டிகளை குறைப்பதற்கு பதிலாக, அவற்றை அமர்ந்து பயணிக்கும் பெட்டிகளாக மாற்றினால், பயணிகளுக்கு செலவு குறையும். ரயில்வேக்கு வருவாய் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X