பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு வாழ்த்து

Added : செப் 09, 2021
Share
வில்லியனுார்-முதல்வர் ரங்கசாமி, பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் நமச்சிவாயம் வீட்டிற்கு சென்று, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் .அமைச்சர் நமச்சிவாயம் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அதையொட்டி, 14 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று காலை 11:00 மணியளவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம்வீட்டிற்கு சென்றார். மனைவி வசந்தியுடன் அமைச்சர் நமச்சிவாயம் வாசலில்

வில்லியனுார்-முதல்வர் ரங்கசாமி, பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் நமச்சிவாயம் வீட்டிற்கு சென்று, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் .அமைச்சர் நமச்சிவாயம் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அதையொட்டி, 14 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று காலை 11:00 மணியளவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம்வீட்டிற்கு சென்றார். மனைவி வசந்தியுடன் அமைச்சர் நமச்சிவாயம் வாசலில் நின்று முதல்வரை வரவேற்று, வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ரங்கசாமி, பேரன் சிவஹரிஷை மடியில் அமரவைத்து கொஞ்சி மகிழ்ந்தார்,அப்போது, பேரன் சிவஹரிஷ், 'கொரோனாவை காரணம் காட்டி கடந்த இரு ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே வைத்திருக்கின்றனர். என்னை வெளியே அழைத்துச் செல்லுங்கள் என, முதல்வரிடம் கேட்டார்.முதல்வர் ரங்கசாமி, மசால் தோசை, பூரி சாப்பிட்டார். பேரன் அழைப்பை ஏற்று, முதல்வர் பேரனுடன் தனியாக அறைக்கு சென்று சிறிதுநேரம் பேசினார். முதல்வரை கையை பிடித்து மாடிக்கு அழைத்துச் சென்ற சிறுவன் வீடு முழுவதும் சுற்றி காட்டினார்.ரங்கசாமியுடன், அமைச்சர் குடும்பத்தினர் போட்டோ எடுத்துக் கொண்டனர். சுமார் 45 நிமிடங்கள் வீட்டில் இருந்த முதல்வர் ரங்கசாமி புறப்பட்டபோது, அமைச்சர் நமச்சிவாயம் கார் வரை சென்று வழியனுப்பி வைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X