56 விமானங்கள் கொள்முதலுக்கு அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

56 விமானங்கள் கொள்முதலுக்கு அனுமதி

Added : செப் 09, 2021
Share
புதுடில்லி : இந்திய விமானப்படை 56 போக்குவரத்து விமானங்கள் கொள்முதல் செய்ய, ராணுவ அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதில் 40 விமானங்கள் உள்நாட்டில் உருவாக உள்ளன.இந்திய விமானப்படைக்கு, ஸ்பெயினில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து 56 போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கான ஒப்பந்தம், விரைவில் ஸ்பெயின் நிறுவனத்துடன்

புதுடில்லி : இந்திய விமானப்படை 56 போக்குவரத்து விமானங்கள் கொள்முதல் செய்ய, ராணுவ அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இதில் 40 விமானங்கள் உள்நாட்டில் உருவாக உள்ளன.இந்திய விமானப்படைக்கு, ஸ்பெயினில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து 56 போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கான ஒப்பந்தம், விரைவில் ஸ்பெயின் நிறுவனத்துடன் கையெழுத்தாகும். இதையடுத்து அந்நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்குள் 16 விமானங்களை ஸ்பெயினில் தயாரித்து வழங்கும்.மீதமுள்ள 40 விமானங்களை, அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் நம் நாட்டில் டாட்டா குழுமம் தயாரிக்கும்.இதன்படி, உள்நாட்டில் தனியார் நிறுவனம் வாயிலாக ராணுவ விமானம் தயாரிக்கும் முதல் திட்டமாக இது உருவாகி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X