கிரைம் செய்திகள்

Added : செப் 09, 2021
Share
Advertisement
பெண்ணிடம் நகை அபேஸ் விழுப்புரம்: சேர்ந்தனுாரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 60; இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி பரமேஸ்வரியுடன், 58, வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில், வீட்டின் பின்பக்க கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது.கதவை திறந்த பரமேஸ்வரியின் கழுத்திலிருந்த 5 சவரன் தாலி செயினை, 30 வயது மதிக்கத்தக்க இரண்டு மர்மநபர்கள், பறித்துக்கொண்டு

பெண்ணிடம் நகை அபேஸ் விழுப்புரம்: சேர்ந்தனுாரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 60; இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி பரமேஸ்வரியுடன், 58, வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில், வீட்டின் பின்பக்க கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது.கதவை திறந்த பரமேஸ்வரியின் கழுத்திலிருந்த 5 சவரன் தாலி செயினை, 30 வயது மதிக்கத்தக்க இரண்டு மர்மநபர்கள், பறித்துக்கொண்டு தப்பியோடினர். வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.விவசாயி மாயம்விழுப்புரம்: வி.மருதுாரை சேர்ந்தவர் சத்யநாராயணன், 57; விவசாயி. இவர் ஓராண்டிற்கு முன் விழுப்புரம் அலமேலுபுரத்தை சேர்ந்த சண்முகம் என்பவரிடம், ஒரு லட்சத்து 13 ஆயிரம் கடனாக வாங்கினார். இந்த தொகையை திருப்பிக்கேட்டு சண்முகம், கோர்ட் மூலம் சம்மன் அனுப்பியுள்ளார்.இதில் மனமுடைந்த சத்யநாராயணன் கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.தந்தை இறந்த சோகம்விவசாயி தற்கொலைவிழுப்புரம்: செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 55; விவசாயி. இவரது தந்தை ஒரு மாதம் முன், வயது முதிர்வு காரணமாக இறந்துவிட்டார். இந்த துக்கத்தில் இருந்த சுப்பிரமணி, கடந்த 1ம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மாணவி தீக்குளிப்புதிருக்கோவிலுார்: வி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகள் கோமதி, 20; மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறார். கொரோனா விடுமுறையால் வீட்டில் இருந்து வந்தார். அவரது தாய் சரளா, 100 நாள் வேலைக்கு சென்று மதியம் வீடு திரும்பிய போது, வீட்டில் வேலை செய்யாமல் இருந்துள்ளார்.இதனால், கோமதியை திட்டியுள்ளார். மனமுடைந்த கோமதி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அரகண்டநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.பெண்ணை தாக்கியவர் கைதுசின்னசேலம்: சின்னசேலம் விஜயபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் செல்வம் மனைவி சத்யா,27; டைலர் கடை நடத்தி வருகிறார். மணிமேகலைக்கும், அவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது. கடந்த 3ம் தேதி நடராஜன் அத்துமீறி கடையில் நுழைந்து சத்யாவை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து நடராஜனை,48; கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X