சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலை வாங்கி தருவதாக மோசடி 7 பேருக்கு 33 ஆண்டு சிறை

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோத்தகிரி : கோத்தகிரியில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த, ஏழு பேருக்கு, 33 ஆண்டுகள் சிறை தண்டனை, 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த 11 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக, கட்டபெட்டு பகுதியை சேர்ந்த பாபு, ரவி உட்பட ஏழு பேர், 33 லட்சத்து, 50 ஆயிரம் பணம் வாங்கியுள்ளனர்.அரசு வேலை வாங்கி தராத நிலையில்,

கோத்தகிரி : கோத்தகிரியில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த, ஏழு பேருக்கு, 33 ஆண்டுகள் சிறை தண்டனை, 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த 11 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக, கட்டபெட்டு பகுதியை சேர்ந்த பாபு, ரவி உட்பட ஏழு பேர், 33 லட்சத்து, 50 ஆயிரம் பணம் வாங்கியுள்ளனர்.அரசு வேலை வாங்கி தராத நிலையில், பணமும் திருப்பித்தரப்படவில்லை. பாதிக்கப்பட்டோர், 2016ல் ஊட்டி குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். கோத்தகிரியில் உள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில், விசாரணை நடந்து வந்தது.அரசு தரப்பில், வக்கீல் பிரசன்னா வெங்கடேஷ் வாதாடினார். நேற்று நீதிபதி ஜெயபிரகாஷ் தீர்ப்பு வழங்கினார்.அதில், மோசடியில் ஈடுபட்ட பாபு, 49, ரவி,54, சக்தி பிரியா, 45, நஞ்சன்,83, மாதி,78, மற்றும் சுமதி,35, புனிதா,50, ஆகியோருக்கு, ஒவ்வொரு வழக்குக்கும் மூன்று ஆண்டுகள் வீதம் 11 வழக்குகளுக்கு மொத்தம், 33 ஆண்டு சிறை தண்டனையும், தலா 55 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.நஞ்சன் இறந்துவிட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X