கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் ெஹல்த் சயின்ஸ் சார்பில் ஊட்டச்சத்து வார நிறைவு விழா நடந்தது.கல்லுாரி தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் கோவிந்தராஜூ, இயக்குநர் மனோபாலா, சிஞ்சு வாழ்த்துரை வழங்கினர். அகிலா வரவேற்றார்.ஊட்டச்சத்து வார விழாவையொட்டி, கடந்த 1 முதல் 7 ம் தேதி வரை வெவ்வேறு பகுதிகளில் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து நிகழ்ச்சி, கொரோனா எதிர்ப்பு சக்தி, ஊட்டசத்து உணவுகள் விற்பனை, உணவுப்பொருள் கண்காட்சி நடந்தது. திட்ட நிறைவு அறிக்கையை மேகலை வாசித்தார்.தொடர்ந்து செய்முறை விளக்கம், மலர் வெளியீட்டு விழா நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பூங்கொடி, வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி வாழ்த்தி பேசினர். ஊட்டச்சத்து உணவுகளை செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்திய துணை செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பேராசிரியர் துர்காதேவி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE