பொது செய்தி

தமிழ்நாடு

2 தொழிற்சாலை உரிமம் ரத்து தேயிலை வாரியம் 'அதிரடி'

Added : செப் 09, 2021
Share
Advertisement
குன்னுார் : விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரு தேயிலை தொழிற்சாலைகளின் உரிமத்தை, குன்னுார் தேயிலை வாரியம் ரத்து செய்தது.தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி கூறியதாவது: இதுவரை விதிமீறிய, 140 தேயிலை தொழிற்சாலைகள், 30 தேயிலை கழிவு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில், 46 தேயிலை நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தரமற்ற பசுந்தேயிலை கொள்முதல்,

குன்னுார் : விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரு தேயிலை தொழிற்சாலைகளின் உரிமத்தை, குன்னுார் தேயிலை வாரியம் ரத்து செய்தது.

தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி கூறியதாவது: இதுவரை விதிமீறிய, 140 தேயிலை தொழிற்சாலைகள், 30 தேயிலை கழிவு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில், 46 தேயிலை நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தரமற்ற பசுந்தேயிலை கொள்முதல், சுகாதாரமின்மை உள்ளிட்ட பல காரணங்களால் தென் மாநிலங்களில், 100 எஸ்டேட் தேயிலை தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அளவுக்கு அதிகமாக தேயிலை கழிவுகளை பயன்படுத்தியது; விற்பனை குறித்து உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காதது; தேயிலை துாள் அதிகளவில் சேமித்து வைத்தது போன்ற காரணங்களுக்காக, கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள இரு எஸ்டேட் தேயிலை தொழிற்சாலைகளின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X