குன்னுார் : விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரு தேயிலை தொழிற்சாலைகளின் உரிமத்தை, குன்னுார் தேயிலை வாரியம் ரத்து செய்தது.
தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி கூறியதாவது: இதுவரை விதிமீறிய, 140 தேயிலை தொழிற்சாலைகள், 30 தேயிலை கழிவு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில், 46 தேயிலை நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தரமற்ற பசுந்தேயிலை கொள்முதல், சுகாதாரமின்மை உள்ளிட்ட பல காரணங்களால் தென் மாநிலங்களில், 100 எஸ்டேட் தேயிலை தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அளவுக்கு அதிகமாக தேயிலை கழிவுகளை பயன்படுத்தியது; விற்பனை குறித்து உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காதது; தேயிலை துாள் அதிகளவில் சேமித்து வைத்தது போன்ற காரணங்களுக்காக, கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள இரு எஸ்டேட் தேயிலை தொழிற்சாலைகளின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE