போலீஸ் மீது தாக்குதல் திருப்பூரில் 4 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் மீது தாக்குதல் திருப்பூரில் 4 பேர் கைது

Added : செப் 09, 2021
Share
திருப்பூர் : திருப்பூரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரிடம் தகராறு செய்து பீர்பாட்டிலால் தாக்கிய, நால்வர் கைது செய்யப்பட்டனர்.திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஏட்டு அர்ஜுனன், போலீஸ்காரர் சந்திரசேகர், நேற்று முன்தினம் இரவு பாண்டியன் நகரில் ரோந்து சென்றனர். அங்குள்ள பால்கோவா நிறுவனத்தில் பணிபுரியும் சரத்குமார், 29,

திருப்பூர் : திருப்பூரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரிடம் தகராறு செய்து பீர்பாட்டிலால் தாக்கிய, நால்வர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஏட்டு அர்ஜுனன், போலீஸ்காரர் சந்திரசேகர், நேற்று முன்தினம் இரவு பாண்டியன் நகரில் ரோந்து சென்றனர். அங்குள்ள பால்கோவா நிறுவனத்தில் பணிபுரியும் சரத்குமார், 29, சரண்ராஜ், 32, பஷீர் அகமது, 33 ஆகியோரை நிறுத்தி பெயர், விபரம் விசாரித்தனர்.'நள்ளிரவில் வெளியே சுற்றக் கூடாது; முக கவசம் இல்லாமல் வெளியே வரக் கூடாது' என எச்சரித்து, வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தினர்.

இந்நிலையில், மூவரும், நண்பர் செபாஸ்டின், 50 என்பவருடன் திரும்பிவந்தனர்.அர்ஜுனன் கிளம்பி சென்றுவிட, போலீஸ்காரர் சந்திரசேகரிடம் தகராறில் ஈடுபட்டனர். அவரை பீர் பாட்டிலால் தாக்கி, 'வாக்கி டாக்கி'யை பறிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்த சந்திரசேகர், உடன் பணிபுரியும் மற்றொரு போலீஸ்காரர் மாதேஸ்வரனுக்கு மொபைல் போனில் தகவல் அளித்தார். அவர் தட்டி கேட்டபோது, அவரையும், கல், கட்டையால் தாக்கிவிட்டு தப்பினர்.காயமடைந்த போலீஸ்காரர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நால்வரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X