திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்

Added : செப் 09, 2021 | |
Advertisement
சேத்தியாத்தோப்பு-சேத்தியாத்தோப்பு அடுத்த வடப்பாக்கம் திரவுபதியம்மன், லட்சுமிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.இதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, மிருத்தியங்கிரகணம், இரவு 7.00 மணிக்கு முதல்கால யாக பூஜை நடந்தது. கடஸ்தாபனம், பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது.நேற்று காலை 6.00 மணிக்கு கோ பூஜையும், 7.00 மணிக்கு

சேத்தியாத்தோப்பு-சேத்தியாத்தோப்பு அடுத்த வடப்பாக்கம் திரவுபதியம்மன், லட்சுமிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.இதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, மிருத்தியங்கிரகணம், இரவு 7.00 மணிக்கு முதல்கால யாக பூஜை நடந்தது. கடஸ்தாபனம், பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது.நேற்று காலை 6.00 மணிக்கு கோ பூஜையும், 7.00 மணிக்கு சப்தகன்னிகளுக்கு பூஜையும், 7.30 மணிக்கு தம்பதி பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை துவங்கியது. 9.30 மணிக்கு கடம்புறப்பாடாகி 9.45 மணிக்கு விமான கும்பாபிேஷகமும், 10.00 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. கும்பாபிேஷகத்திற்கான ஏற்பாடுகளை வடப்பாக்கம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X