சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்தொழிலாளி மீது 'போக்சோ'

Added : செப் 09, 2021
Share
Advertisement
கடலுார்-சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி மீது 'போக்சோ' சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்து தேடுகின்றனர்.கடலுார் மாவட்டம், வடலுார் போலீஸ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ், 40; வடலுாரில் தனியார் பிளாஸ்டிக் கம்பெனி தொழிலாளி. இவர், பிளஸ் 2 முடித்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல்

கடலுார்-சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி மீது 'போக்சோ' சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்து தேடுகின்றனர்.கடலுார் மாவட்டம், வடலுார் போலீஸ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ், 40; வடலுாரில் தனியார் பிளாஸ்டிக் கம்பெனி தொழிலாளி. இவர், பிளஸ் 2 முடித்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.இதனையறிந்து, கடந்த 25ம் தேதி நியாயம் கேட்க சென்ற சிறுமியின் தாயிடம் நடந்து சம்பவத்தை வெளியில் கூறினால் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.மறுநாள் சிறுமியை, வடலுார் செல்லியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று சந்தோஷ் திருமணம் செய்து கொண்டார்.பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து சந்தோ ைஷ தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X