ஏரி பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்பு: மு.பட்டியில் நுாறு நாள் பணி பாதிப்பு

Added : செப் 09, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே ஏரியின் பாசன வாய்க்காலை தனிநபர் ஆக்கிரமித்து பென்சிங் போடப்பட்டுள்ளதால் நுாறு நாள் திட்டத்தில் துார்வாரும் பணி பாதித்துள்ளது.விருத்தாசலம் அடுத்த மு.பட்டி ஊராட்சியில் 18.5 ஏக்கர் பரப்பளவில் விருத்தகிரி ஏரி உள்ளது. இதன் மூலம் மு.பட்டி மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம விளைநிலங்கள் பாசனம் பெற்றன.தற்போது, துார்ந்து கிடக்கும்

விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே ஏரியின் பாசன வாய்க்காலை தனிநபர் ஆக்கிரமித்து பென்சிங் போடப்பட்டுள்ளதால் நுாறு நாள் திட்டத்தில் துார்வாரும் பணி பாதித்துள்ளது.விருத்தாசலம் அடுத்த மு.பட்டி ஊராட்சியில் 18.5 ஏக்கர் பரப்பளவில் விருத்தகிரி ஏரி உள்ளது. இதன் மூலம் மு.பட்டி மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம விளைநிலங்கள் பாசனம் பெற்றன.தற்போது, துார்ந்து கிடக்கும் ஏரியின் கரையை தனிநபர்கள் ஆக்கிரமித்து விளைநிலங்களாக மாற்றி வருகின்றனர்.மேலும் ஏரியில் இருந்து செல்லும் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து, தனிநபர் ஒருவர் பென்சிங் அமைத்துள்ளார்.இதனால் பொது மக்கள் மட்டுமல்லாது கால்நடைகளும் அந்த வழியாக செல்ல முடியவில்லை. ஊராட்சி நிர்வாகம் சார்பில் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் விருத்தகிரி ஏரியின் பாசன வாய்க்காலை துார்வாரி, நீர்வரத்து தடையின்றி கிடைக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால், பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து பென்சிங் போட்டுள்ளதால், பணியாளர்கள் உள்ளே செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். இது குறித்து விருத்தாசலம் தாசில்தார் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.இதனால் நுாறு நாள் திட்டப் பணிகள் பாதித்துள்ளது. எனவே, மு.பட்டி விருத்தகிரி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, நுாறு நாள் திட்டப் பணியில் துார்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X