பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., திட்ட 'பிதாமகன்கள்' கவுரவிப்பு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

Added : செப் 09, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டம் நிறைவேற காரணமாக இருந்த, 'பிதாமகன்'களை கவுரவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு, திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.பரம்பிக்குளம் -- ஆழியாறு பாசனத்திட்டம் நிறைவேற காரணமாக இருந்த தலைவர்களை, கவுரவிப்பதாக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சட்டசபையில் அறிவித்துள்ளார். இதை விவசாயிகள்

பொள்ளாச்சி : பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டம் நிறைவேற காரணமாக இருந்த, 'பிதாமகன்'களை கவுரவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு, திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

பரம்பிக்குளம் -- ஆழியாறு பாசனத்திட்டம் நிறைவேற காரணமாக இருந்த தலைவர்களை, கவுரவிப்பதாக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சட்டசபையில் அறிவித்துள்ளார். இதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறியதாவது:பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தை அப்போதைய முதல்வர் காமராஜ் கொண்டு வந்தபோது, கேரள அரசுடனான பேச்சு இழுபறியில் இருந்தது. கேரள முதல்வர் பட்டம் தாணு பிள்ளையை சந்தித்து பேசி, திட்டம் நிறைவேற காரணமாக இருந்தவர் அப்போதைய மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம்.திட்டம் நிறைவேற காலதாமதம் ஏற்பட்டபோது, அதைக்கண்டித்து தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தவர் வி.கே.பழனிசாமி.காமராஜரை அடிக்கடி சந்தித்து, பி.ஏ.பி., திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் பலனை எடுத்துக்கூறி, திட்டம் நிறைவேற உறுதுணையாக இருந்தவர்

தொழிலதிபர் மகாலிங்கம்.அவர்களை கவுரவிக்கும் வகையில், உருவச்சிலைகள் நிறுவவும், பொள்ளாச்சி நீர்ப்பாசனத் துறை அலுவலக வளாகத்தில், 4 கோடி ரூபாயில் அரங்கம் அமைத்து, அதற்கு அவர்கள் பெயர் சூட்டவும், அக்., 7ம் தேதியை 'பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்ட தினம்' என கொண்டாடவும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதற்கு பாசன விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X