பொது செய்தி

தமிழ்நாடு

மரங்களை வெட்ட பசுமைக்குழு அனுமதியும் பெற வேண்டும்: கலெக்டர் பாலசுப்ரமணியம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
கடலுார்-பொது இடங்களிலுள்ள மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அனுமதியுடன் பசுமைக்குழு அனுமதியும் பெற வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.கடலுார் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பசுமை குழு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கி பேசியதாவது:மாவட்டத்தில் மொத்த வன பரப்பளவு 9950.34 எக்டர். காடுகளின் பரப்பளவை உயர்த்துவதற்கு

கடலுார்-பொது இடங்களிலுள்ள மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அனுமதியுடன் பசுமைக்குழு அனுமதியும் பெற வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.கடலுார் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பசுமை குழு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கி பேசியதாவது:மாவட்டத்தில் மொத்த வன பரப்பளவு 9950.34 எக்டர். காடுகளின் பரப்பளவை உயர்த்துவதற்கு காலியிடம் எவ்வளவு உள்ளதென்று கண்டறிந்து அதில் மரம் நடவு செய்ய அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.பொது இடங்களிலுள்ள மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அனுமதியுடன் பசுமைக்குழு அனுமதியும் பெற வேண்டும். மேலும் பொது இடங்கள் மற்றும் துறைவாரியாக இருப்பிலுள்ள மரங்களின் எண்ணிக்கை மற்றும் இருப்பிலுள்ள நாற்றங்கால் எண்ணிக்கை அறிந்து, மரம் நடவு செய்தல் பெரியளவில் மேற்கொள்ளப்பட வேண்டும்.அதற்கு விருப்பம் உள்ள தன்னார்வலர்கள், மகளிர் குழுக்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ் மாணவர்களையும் ஈடுபடுத்திக்கொள்ளவும் மரங்கள் நடுவதற்கு செடிகள் வனத்துறை வழங்க வேண்டுமென்றும் கலெக்டர் அறிவுறுத்தினார்.இக் கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ரஞ்ஜித்சிங், மாவட்ட வன அலுவலர் செல்வம், கோட்டபொறியாளர் பரந்தாமன், இணை இயக்குனர் பாலசுப்ரமணியன், உதவி ஆணையர் பரணிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X