ஊக்க சலுகையால் ஜவுளி உற்பத்தி வலுப்பெறும்! மத்திய அரசு திட்டத்துக்கு வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊக்க சலுகையால் ஜவுளி உற்பத்தி வலுப்பெறும்! மத்திய அரசு திட்டத்துக்கு வரவேற்பு

Added : செப் 09, 2021
Share
திருப்பூர் : 'உற்பத்தி சார்ந்த ஊக்கச்சலுகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், நாட்டின் செயற்கை இழை ஆடை உற்பத்தி துறை வலுப்பெறும்' என, ஜவுளித்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.செயற்கை இழை ஆடை உற்பத்தியை அதிகரிப்பதற்காக, உற்பத்தி சார்ந்த ஊக்கச்சலுகை என்ற புதிய திட்டத்தை மத்திய ஜவுளி அமைச்சகம் அறிவித்தது. இதற்கு, மத்திய அமைச்சரவை


திருப்பூர் : 'உற்பத்தி சார்ந்த ஊக்கச்சலுகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

. இதனால், நாட்டின் செயற்கை இழை ஆடை உற்பத்தி துறை வலுப்பெறும்' என, ஜவுளித்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.செயற்கை இழை ஆடை உற்பத்தியை அதிகரிப்பதற்காக, உற்பத்தி சார்ந்த ஊக்கச்சலுகை என்ற புதிய திட்டத்தை மத்திய ஜவுளி அமைச்சகம் அறிவித்தது. இதற்கு, மத்திய அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியது.இத்திட்டத்தில், செயற்கை இழை ஆடை, துணி மற்றும் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு, ஊக்க சலுகை வழங்கப்படும். இதற்காக, 10 ஆயிரத்து 683 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் புதிய முதலீடு; அடுத்த ஐந்து ஆண்டுகளில், 3 லட்சம் கோடி ரூபாய்க்கு கூடுதல் உற்பத்தி வருவாய்; 7.5 லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதை ஜவுளித்துறையினர் வரவேற்றுள்ளனர்.ஆடை ஏற்றுமதி இரட்டிப்பாகும்ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக(ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல்: இந்திய ஜவுளித்துறையின் உற்பத்தி திறன் மேம்படவும், ஏற்றுமதி பலமடங்கு உயரவும் இந்த திட்டம் கைகொடுக்கும். மதிப்பு கூட்டப்பட்ட செயற்கை இழை ஆடை உற்பத்தி அதிகரித்து, உலக சந்தையில், இந்தியா முக்கியமான நாடாக மாறும். செயற்கை இழை துணி மற்றும் ஆடை உற்பத்தி வலுப்பெறும். இந்திய ஆடை ஏற்றுமதி, அடுத்த மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாகிவிடும்.

நாட்டின் மொத்த ஏற்றுமதி 30 லட்சம் கோடி என்ற இலக்கை அடைவதற்கு, இப்புதிய திட்டம் அதிக பங்களிப்பை செலுத்தும்.புதிய வாய்ப்புகள் கிடைக்கும்திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம்: செயற்கை இழை, தொழில்நுட்ப ஜவுளி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பு துறை வளர்ச்சி பெறுவதற்கு, திட்டம் கைகொடுக்கும். இந்திய ஜவுளித்துறையினருக்கு, உலகளாவிய சந்தையில் புதிய வாய்ப்புகள் கைகூடும். சர்வதேச அளவில், இந்திய ஆடை ஏற்றுமதி பங்களிப்பு உயரும். வேலைவாய்ப்பும் பெருகும்.

ஜவுளித்துறை மேம்படும்இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் கன்வீனர் பிரபு தாமோதரன்: உலக அளவில் செயற்கை இழை ஆடைகள் தேவை அதிகரித்து வருகிறது. இத்திட்டத்தால் மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பு பெருகும். இந்திய ஜவுளித்துறையினர், சர்வதேச போட்டியை எதிர்கொள்ள முடியும். செயற்கை இழை துணி மற்றும் ஆடை, தொழில்நுட்ப ஜவுளி உற்பத்திக்கான பெரிய மற்றும் வலிமையான கட்டமைப்பு உருவாகும். நாட்டின் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம், சிறப்பான வளர்ச்சி பெறும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X