பொது செய்தி

தமிழ்நாடு

நவீனமாகுமா போலீஸ் மருத்துவமனைகள்! முதல்வர் மனது வைக்க போலீசார் எதிர்பார்ப்பு

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோவை : போலீசாருக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பணம் பிடிப்பதற்கு பதிலாக, அந்த பணத்தை வைத்து போலீஸ் மருத்துவமனைகளை நவீனமாக்கினாலே போலீசார் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரும் பயன் பெறுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பணியாற்றி வருகின்றனர். போலீசார் மற்றும் குடும்பத்தினரின் மருத்துவ தேவைக்காக

கோவை : போலீசாருக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பணம் பிடிப்பதற்கு பதிலாக, அந்த பணத்தை வைத்து போலீஸ் மருத்துவமனைகளை நவீனமாக்கினாலே போலீசார் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரும் பயன் பெறுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பணியாற்றி வருகின்றனர். போலீசார் மற்றும் குடும்பத்தினரின் மருத்துவ தேவைக்காக மாவட்டந்தோறும் போலீஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், போதிய வசதிகள் இல்லாமல் உள்ளன.போலீசார் கூறியதாவது:மருத்துவ காப்பீடு திட்டத்தில், 2011ம் ஆண்டு முதல் மாதந்தோறும் போலீசாரின் ஊதியத்தில், 150 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. 2016ம் ஆண்டு முதல், 180 ரூபாயாக பிடித்தம் செய்யப்பட்டது. கடந்த பத்தாண்டுகளாக மாநிலம் முழுவதுமுள்ள போலீசாரிடம் பணம் பெற்றும், முழுமையான மருத்துவ சேவை கிடைக்கவில்லை.இத்திட்டத்தில் போலீசாரின் பெற்றோர்களுக்கு மருத்துவ உதவி இல்லை. நடைமுறையில் இவ்வளவு சிக்கல் இருக்க, 2021ம் ஆண்டு முதல் காப்பீட்டில் மாதம், 300 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. மருத்துவ காப்பீடு திட்டத்தில் போலீசாரின் பெற்றோரையும் சேர்க்க வேண்டும்.மருத்துவ காப்பீட்டை கைவிட்டு, போலீஸ் மருத்துவமனைகளை நவீனமாக்கினாலே, போலீசார் மற்றும் குடும்பத்தினர் சிகிச்சை பெறலாம்.

பல கோடி ரூபாய் பணத்தில் அனைத்து வகை சிகிச்சை அளிக்க கூடிய பிரமாண்ட மருத்துவமனைகளை உருவாக்கிவிடலாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.மகப்பேறு வசதி கிடையாது!போலீஸ் மருத்துவமனைகளில் பெரும்பாலும் மகப்பேறு வசதி இல்லாமல் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஒரு மகப்பேறுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஸ்கேன், சி.டி., ஸ்கேன், எலும்பு சிகிச்சை, கண் சிகிச்சை என, முக்கிய மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாத மருத்துவமனைகளாகவே உள்ளதாக போலீசார் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X