விலைவாசி உயர்வு உட்பட, பல விஷயங்களை முன் வைத்து காங்கிரஸ் போராட்டம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
பெங்களூரு-ஏழைகளுக்கு சுமையேற்றும் விலைவாசி உயர்வு உட்பட, பல விஷயங்களை முன் வைத்து, பெங்களூரில் காங்கிரஸ், நேற்று போராட்டம் நடத்தியது.விலை வாசி உயர்வை கண்டித்து, பெங்களூரில் காங்கிரசார், நேற்று போராட்டம் நடத்தினர். நகரின் ஆனந்த ராவ் சதுக்கத்திலிருந்து, ராஜ்பவன் வரை ஊர்வலம் நடத்தினர்.மாநில காங்., செயல் தலைவர் ராமலிங்க ரெட்டி, முன்னாள் அமைச்சர்கள் ஜார்ஜ், கிருஷ்ண பைரே

பெங்களூரு-ஏழைகளுக்கு சுமையேற்றும் விலைவாசி உயர்வு உட்பட, பல விஷயங்களை முன் வைத்து, பெங்களூரில் காங்கிரஸ், நேற்று போராட்டம் நடத்தியது.விலை வாசி உயர்வை கண்டித்து, பெங்களூரில் காங்கிரசார், நேற்று போராட்டம் நடத்தினர். நகரின் ஆனந்த ராவ் சதுக்கத்திலிருந்து, ராஜ்பவன் வரை ஊர்வலம் நடத்தினர்.மாநில காங்., செயல் தலைவர் ராமலிங்க ரெட்டி, முன்னாள் அமைச்சர்கள் ஜார்ஜ், கிருஷ்ண பைரே கவுடா, மகளிர் காங்., பிரிவு தலைவி புஷ்பா அமர்நாத் உட்பட பலர் பங்கேற்றனர்.சமையல் எரிவாயு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டிக்கும் வகையில், சாலையில் விறகு அடுப்பு வைத்து, காய்கறிகளுடன் சமையல் செய்வது, பைக், கார்களை மாட்டு வண்டி மூலம் இழுத்தும், அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.ராமலிங்கரெட்டி பேசுகையில், ''இதற்கு முன் காங்கிரஸ் அரசில், சிறிய அளவில் விலை உயர்த்தினாலும், பா.ஜ., தலைவர்கள் நரேந்திர மோடி, எடியூரப்பா, ஷோபா, ஸ்மிருதி இரானி உட்பட, பலர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இப்போது விலையை உயர்த்தியும், இத்தலைவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை,'' என்றார்கிருஷ்ண பைரேகவுடா பேசுகையில், ''காங்கிரஸ் அரசு வாங்கிய கடனை அடைக்க, விலையை உயர்த்துவது கட்டாயம் என, பா.ஜ.,வினர் பொய் பிரச்சாம் செய்கின்றனர். நேபாளம், இலங்கை, பூடான், வங்கதேசம், பாகிஸ்தான் என பல நாடுகளில், 60 முதல் 70 ரூபாய்க்கு, பெட்ரோல் விற்கப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் விலையை உயர்த்தி, மக்களுக்கு சுமையை ஏற்படுத்துகின்றனர்,'' என்றார்.இது போன்று, ஜார்ஜ், எம்.எல்.ஏ., சவும்யா ரெட்டி உட்பட பல தலைவர்கள், விலைவாசி உயர்வை கண்டித்து பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X