பொது செய்தி

இந்தியா

பெங்களூரில் சாலை பள்ளங்களை மூட சிறப்பு குழு

Added : செப் 09, 2021
Share
Advertisement
பெங்களூரு-பெங்களூரில் சாலை பள்ளங்களை மூட, அனைத்து மண்டலங்களிலும் பொறியாளர்கள், செயல் நிர்வாக பொறியாளர்கள், வார்டு பொறியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:சம்பந்தப்பட்ட துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் சாலை பள்ளங்களை மூடும் பணிகள், சரியாக மேற்பார்வை

பெங்களூரு-பெங்களூரில் சாலை பள்ளங்களை மூட, அனைத்து மண்டலங்களிலும் பொறியாளர்கள், செயல் நிர்வாக பொறியாளர்கள், வார்டு பொறியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:சம்பந்தப்பட்ட துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் சாலை பள்ளங்களை மூடும் பணிகள், சரியாக மேற்பார்வை இடப்படுவதில்லை. எனவே சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தார் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து, தார் வரவழைத்து அனைத்து வார்டுகளின் சாலை பள்ளங்களை ஒப்பந்ததாரர்கள் மூட வேண்டும்.பள்ளங்களை சரி செய்து சுமூகமான வாகன போக்குவரத்துக்கு வழி வகுக்க வேண்டும். மண்டல அளவிலான செயல் நிர்வாக பொறியாளர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து சாலைகளையும் பட்டியலிட வேண்டும்.பள்ளங்களை அடையாளம் காண வேண்டும். அதன்பின் பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாலைகள் அபிவிருத்தி திட்டப்பிரிவின், செயல் நிர்வாக பொறியாளர்கள், பழுதடைந்த சாலைகள் விபரங்களை, சம்பந்தப்பட்ட பிரிவின் பொறியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். பள்ளங்கள் மூடப்பட்டதா என்பதை, உறுதிப்படுத்த வேண்டும்.வார்டு அளவிலான பொறியாளர்கள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட சாலைகள் பழுதடைந்த மற்றும் பணிகள் நடக்கும் சாலைகள் பற்றிய தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பள்ளம் ஏற்பட்ட சாலைகளை அவ்வப்போது பழுது பார்க்க வேண்டும்.அந்தந்த மண்டலத்தின் தலைமை பொறியாளர்கள், சாலை பள்ளங்களை மூடும் பணிகளை மேற்பார்வையிட வேண்டும். சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கிடையே, ஒருங்கிணைப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.தேவையான ஒத்துழைப்பு தர வேண்டும். சாலை பள்ளங்களை மூடப்பட்டது தொடர்பான விபரங்களை, தலைமை பொறியாளர் அலுவலகத்திலிருந்து சேகரித்து, நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை கமிஷனரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X