மனைவியை பிரித்ததால்கணவர் தற்கொலை

Added : செப் 09, 2021
Share
Advertisement
ராய்ச்சூர்-காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை, தன்னிடமிருந்து பிரித்ததால், வருத்தமடைந்த கணவர், 'வீடியோ'வில் பேசி பதவி செய்து தற்கொலை செய்து கொண்டார்.ராய்ச்சூரின் கானதாளா கிராமத்தில் வசித்த பீமேஷ், 27, சந்தியா, 22, பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்தனர். குடும்பத்தினரின்

ராய்ச்சூர்-காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை, தன்னிடமிருந்து பிரித்ததால், வருத்தமடைந்த கணவர், 'வீடியோ'வில் பேசி பதவி செய்து தற்கொலை செய்து கொண்டார்.ராய்ச்சூரின் கானதாளா கிராமத்தில் வசித்த பீமேஷ், 27, சந்தியா, 22, பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்தனர். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கொண்டனர்.இது குறித்து சந்தியாவின் குடும்பத்தினர், இடபனுர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புதுமண தம்பதியரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். சந்தியாவை பலவந்தமாக பெற்றோருடன் அனுப்பினர்.இதனால் மனம் நொந்த பீமேஷ், நேற்று காலை வீடியோவில், 'என் இறப்புக்கு இடபனுர் போலீஸ் எஸ்.ஐ., இளம்பெண்ணின் தந்தை சக்கரபாணி உட்பட சிலரே காரணம்' என பேசி, பலருக்கும் அந்த செய்தியை பகிர்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X