பொது செய்தி

இந்தியா

பி.எம்.டி.சி., பஸ்சுக்கு, போக்குவரத்து துறை அதிகாரிகள், 12 ஆயிரம் ரூபாய் அபராதம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
பெங்களூரு-சிக்னல் ஜம்ப் உட்பட பல விதமான விதிமுறைகளை மீறியது தொடர்பாக, பி.எம்.டி.சி., பஸ்சுக்கு, போக்குவரத்து துறை அதிகாரிகள், 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.பி.எம்.டி.சி.,யின் பஸ் ஒன்று, 2018 மார்ச் 16ல், டிப்போ எண் 26 லிருந்து, டிப்போ எண் 45க்கு இடம் மாற்றப்பட்டிருந்தது.இந்த பஸ்சை 2021 ஜூன் 30ல் புதுப்பிக்க சென்ற போது, ஆர்.டி.ஓ., அதிகாரிகள், இந்த பஸ் சிக்னல் ஜம்ப், புகை பரிசோதனை

பெங்களூரு-சிக்னல் ஜம்ப் உட்பட பல விதமான விதிமுறைகளை மீறியது தொடர்பாக, பி.எம்.டி.சி., பஸ்சுக்கு, போக்குவரத்து துறை அதிகாரிகள், 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.பி.எம்.டி.சி.,யின் பஸ் ஒன்று, 2018 மார்ச் 16ல், டிப்போ எண் 26 லிருந்து, டிப்போ எண் 45க்கு இடம் மாற்றப்பட்டிருந்தது.இந்த பஸ்சை 2021 ஜூன் 30ல் புதுப்பிக்க சென்ற போது, ஆர்.டி.ஓ., அதிகாரிகள், இந்த பஸ் சிக்னல் ஜம்ப், புகை பரிசோதனை சான்றிதழை புதுப்பிக்காதது உட்பட, பல விதங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருப்பதை கண்டுபிடித்தனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக, இந்த பஸ்சுக்கு, 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.எனவே பஸ்சை புதுப்பிக்க முடியாது என அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். விதிமுறைகளை மீறிய நேரத்தில், இந்த பஸ்சை ஓட்டுனர் வெங்கடப்பா ஓட்டினார். தற்போது அவர் இறந்துவிட்டார்.எனவே அன்றைய நாட்களில், ஓட்டுனருடன் பணியாற்றிய நடத்துனர் லட்சுமணிடம், அபராத தொகையை வசூலிக்கும்படி, வடக்கு மண்டல கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அன்றைய தினம், நிர்ணயித்த இடத்தில் பஸ்சை நிறுத்தும்படி நடத்துனர். ஓட்டுனருக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. எனவே நடத்துனர் லட்சுமணிடம், அபராத தொகை வசூலிக்கப்படும்.தற்போது இவர் டிப்போ 32ல் பணியாற்றுகிறார். இவரிடம் அபராத தொகையை வசூலிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X