அக்கடா... துக்கடா... கர்நாடகா!சரியாகாத தேசிய நெடுஞ்சாலைசமைத்து சாப்பிட்டு போராட்டம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
சிக்கபல்லாபூர்:சிக்கபல்லாபூரில் இருந்து கவுரி பிதனுார் செல்லும் வழியில் மஞ்சேனஹள்ளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஐந்தாண்டுக்கும் மேலாகியும் சாலை இன்னும் சரி செய்யப்படவில்லை.இந்த வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சமீபத்தில் பெய்த பலத்த மழையால் ரோடுகள் குண்டும், குழியுமாக மாறி விட்டதால் அடிக்கடி

சிக்கபல்லாபூர்:சிக்கபல்லாபூரில் இருந்து கவுரி பிதனுார் செல்லும் வழியில் மஞ்சேனஹள்ளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஐந்தாண்டுக்கும் மேலாகியும் சாலை இன்னும் சரி செய்யப்படவில்லை.

இந்த வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சமீபத்தில் பெய்த பலத்த மழையால் ரோடுகள் குண்டும், குழியுமாக மாறி விட்டதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.இந்த சாலையை சரி செய்ய கோரி, பல முறை பொதுமக்கள் மனு அளித்தும் சரிசெய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், சேதமடைந்த ரோட்டில் நேற்று சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தினர்.*துமகூரு மாவட்டத்தில் புதுமைபழைய சைக்கிள்களுக்கு மவுசுதுமகூரு: கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வுகளால் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளுக்கும் இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன. அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.ஆனால், துமகூரு மாவட்டத்தில் போக்குவரத்தை மட்டும் மக்கள் பழையபடி பயன்படுத்தவில்லை. பஸ்களில் யாரும் செல்வதில்லை; இரு சக்கர வாகனங்களிலேயே சென்று வருகின்றனர். இரு சக்கர வாகனங்கள் இல்லாதவர்களும் பழைய வாகனங்களை வாங்க ஆரம்பித்துள்ளனர்.பழைய வாகனங்களை வாங்க வசதி இல்லாதோர், சைக்கிள் வாங்க ஆரம்பித்துள்ளனர். அதிலும் பழைய இரும்பு கடைக்கு செல்லும் வகையிலான சைக்கிள்களையும் வாங்கி, அதை பழுது பார்த்து பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.இதனால் துமகூரு மாவட்டத்தில் பழைய சைக்கிள்களுக்கும் மவுசு ஏற்பட்டுள்ளது.*மழையால் வீட்டை இழந்துதவிக்கும் ஏழை குடும்பம்ஹாசன்: ஹாசன் மாவட்டம், சென்னராயபட்டணா தாலுகா, ஸ்ரவணபெலகோளாவில் உள்ள ஸ்ரீகண்டா நகரை சேர்ந்தவர் மஞ்சுளம்மா, 40. கணவரை இழந்தவர். இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து வரும் இவரது ஓட்டு வீடு, சமீபத்தில் பெய்த மழையில் தரை மட்டமானது.இதனால் வசிக்க வீடின்றி, இடிந்து விழுந்த வீட்டின் அருகில், குடிசை அமைத்து தங்கி இருந்து வருகிறார். ஊரடங்கால் வேலையும் இல்லாமல் சாப்பிடவும் வழியின்றி தவித்து வருகிறார். வீடு இடிந்து விழுந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஞ்சுளாம்மா கோரியுள்ளார்.*சாக்கடை நீரிலும் கொட்டுது பணம்லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்கொப்பால்:கொப்பால் மாவட்டம் கனககிரியை சேர்ந்தவர் மல்லம்மா, 50. இவருக்கு தனக்கு சொந்தமான அரை ஏக்கர் நிலத்தில் சாக்கடை நீரை பயன்படுத்தி பல்வேறு வகையான பூக்கள், காய்கறிகள், கீரைகளை விளைவித்து ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்.மல்லம்மா இதுவரை ஆறுமுறை கர்ப்பபை, முழங்கால், கண் என அறுவை சிகிச்சை செய்துள்ளார். இவரது கணவர் 18 ஆண்டுக்கு முன்பும்; 11 ஆண்டுக்கு முன் மகள், புற்று நோயாலும் உயிரிழந்து விட்டனர். நான்கு ஆண்டுக்கு முன் ஒரே மகனும் தற்கொலை செய்து கொண்டார்.இவ்வளவு பிரச்னைக்கு இடையிலும் மல்லம்மா, சாக்கடை நீரை பயன்படுத்தி விவசாயத்தில் சாதித்து வருகிறார். அவருக்கு இப்பகுதியினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.*மீண்டும் விதைப்பில்ஈடுபடும் விவசாயிகள்பெலகாவி:பெலகாவி மாவட்டத்தில் இரண்டு மாதங்களாக பெய்த பலத்த மழையால், கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில், ஆற்றங்கரையோரம் மற்றும் வெள்ளத்தால் சூழப்பட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.இனியும் அதை காப்பாற்ற முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சேதம் அடைந்த பயிர்களை அதிகாரிகள் பார்வையிடவில்லை. நிவாரணமும் கிடைக்கவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், சேதமடைந்த பயிர்களை அழித்து விட்டு மீண்டும் விதைப்பு பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு மீண்டும் விதைப்பு பணிக்காக, பணமின்றி தவித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X