தேனீ ஆராய்ச்சி நிலையம் விவசாயிகள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேனீ ஆராய்ச்சி நிலையம் விவசாயிகள் வலியுறுத்தல்

Added : செப் 09, 2021
Share
கோவை, : 'கோவையில் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும்' என்று, தேனீ வளர்க்கும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழகத்தில் கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் மாவட்டங்களில் 2,500 பேர், தொழில் முறையில் தேனீக்கள் வளர்க்கின்றனர். கெட்டுப் போகாத உணவுப்பொருளான தேனுக்கு ஆண்டு முழுவதும் தேவை இருக்கிறது. கூடுதல் வருமானம், அயல் மகரந்தச்சேர்க்கை மூலம்

கோவை, : 'கோவையில் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும்' என்று, தேனீ வளர்க்கும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் மாவட்டங்களில் 2,500 பேர், தொழில் முறையில் தேனீக்கள் வளர்க்கின்றனர். கெட்டுப் போகாத உணவுப்பொருளான தேனுக்கு ஆண்டு முழுவதும் தேவை இருக்கிறது. கூடுதல் வருமானம், அயல் மகரந்தச்சேர்க்கை மூலம் பயிர் விளைச்சல் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் விவசாயிகள் தேனீ வளர்ப்பதை, மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்கின்றன.'தேனீ வளர்ப்பு மூலம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். கோவையில் தேனீ ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கடை அமைத்து விற்பனை செய்வதற்கு வழி வகை செய்ய வேண்டும்' என்றும், முதல்வருக்கு தேனீ வளர்ப்போர் அனுப்பிய மனுவில் கோரியுள்ளனர்.ஆனைமலை தேனீ வளர்ப்பாளர் விவேக் கூறுகையில், ''தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தேனீ பெட்டி சப்ளை செய்யும் பணியில் இரு நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த தேனீ வளர்ப்போருக்கு இந்த ஒப்பந்தம் வழங்கினால், பயனாளிகளுக்கு பயிற்சி அளிக்கவும், சந்தேகங்களுக்கு தீர்வு கூறவும் உதவியாக இருக்கும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X