பொது செய்தி

தமிழ்நாடு

நேரு ஸ்டேடியத்தில் பயிற்சிக்கு அனுமதி

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோவை : நீண்ட நாட்களுக்கு பிறகு நேரு ஸ்டேடியத்தில் தடகள வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டுள்ளதால், வீரர்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.கோவையில் கொரோனா தாக்கம் அதிகம் இருப்பதால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, வீரர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் பயிற்சி மேற்கொள்ள, அரசு அனுமதி வழங்கி உள்ளது.கோவை நேரு ஸ்டேடியத்தில்,

கோவை : நீண்ட நாட்களுக்கு பிறகு நேரு ஸ்டேடியத்தில் தடகள வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டுள்ளதால், வீரர்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.கோவையில் கொரோனா தாக்கம் அதிகம் இருப்பதால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, வீரர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் பயிற்சி மேற்கொள்ள, அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கோவை நேரு ஸ்டேடியத்தில், கடந்த சில தினங்களாக வீரர்கள் கட்டுப்பாடுகளுடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். வீரர்கள், சுழற்சி முறையில் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு தடகள குழுவிற்கு, 20 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது.நீண்ட நாட்களுக்கு பிறகு, சின்தெடிக் ஓடுதளப்பாதையில் பயிற்சிக்கு அனுமதி கிடைத்துள்ளதால், வீரர்கள் உற்சாகத்துடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.வூசு போட்டியில் மாணவன் சாதனைநேபாளம் யூத் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் சார்பில், 11வது சர்வதேச நேபால் கேம்ஸ் ஹூரோஸ் கப் போட்டி, நேபாளத்தில் நடந்தது. வீரர்களுக்கான வூசு, கிக் பாக்சிங், கராத்தே, மல்யுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.வூசு போட்டியில் கோவை, ஸ்ரீநாராயணகுரு கலை அறிவியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் நவநீதன், 60 கிலோ எடை பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தினார். மாணவனை கல்லுாரியின் முதல்வர் இளங்கோவன், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டினர். இத்தகவலை, கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்தார். ஆன்லைன் செஸ்; தீபக் முதலிடம்குளோபல் அவுட்லியர் அகாடமியின் சார்பில், செஸ் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, '67வது குளோபல் அவுட்லியர்' செஸ் போட்டி ஆன்லைன் வாயிலாக நடத்தது. ஏழு சுற்றுகளாக நடந்த போட்டியில், 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.போட்டியின் முடிவில், தீபக், பாலவிக்னேஷ், சகிஷ்ணு ஆகியோர் அதிக புள்ளிகள் பெற்று முதல், மூன்று இடங்களை பிடித்தனர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு, இ- சான்றிதழ் வழங்கப்பட்டது.2வது டிவிஷன் கிரிக்கெட்; ஜாலி ரோவர்ஸ் வெற்றிமாவட்ட அளவிலான இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டியில், ஜாலி ரோவர்ஸ் எஸ்.சி., அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019- 20ம் ஆண்டு, 'யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேன்சர்ஸ்' கோப்பைக்கான, இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டி, ஸ்ரீசக்தி இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், ஆர்.கே.எஸ்., சி.ஏ., அணி, ஜாலி ரோவர்ஸ் எஸ்.சி., அணிகள் மோதின.முதலில் விளையாடிய ஆர்.கே.எஸ்., அணி, 44.4 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 141 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஜாலி ரோவர்ஸ் அணி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 45.5 ஓவரில், 6 விக்கெட் இழப்புக்கு, 142 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.குதிரையேற்ற போட்டி; கோவை வீரர்கள் அசத்தல்மாநில அளவிலான குதிரையேற்ற போட்டியில், கோவையை சேர்ந்த குதிரையேற்ற வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.'சென்னை இக்குபேஷன் சென்டர்' சார்பில், மாநில அளவிலான குதிரையேற்றம் போட்டி சென்னை, சோழிங்கநல்லுார் பகுதியில் நடந்தது. 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.14 வயது கீழ், 14 வயதுக்கு மேல் என, இரண்டு பிரிவுகளில் போட்டி நடந்தது. தேசிய போட்டிக்கான வீரர்கள் தேர்வும் நடந்தது.இந்த மாநில போட்டியில் கோவை, நவஇந்தியா பகுதியில் அமைந்துள்ள அலெக்ஸ்சாண்டர் குதிரையேற்றம் பள்ளியிலிருந்து 9 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.குதிரையேற்ற உயரம் தாண்டுதல் பிரிவில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவை வீரர்கள், 9 பதக்கங்களை வென்று அசத்தினர். வெற்றி பெற்ற வீரர்களை, அலெக்ஸ்சாண்டர் குதிரையேற்றம் பள்ளி நிர்வாகி சக்தி பாலாஜி, பயிற்சியாளர் சரவணன் பாராட்டினர்.2வது டிவிஷன்; ராஜசேகர் மணி எம்.சி.சி.,வெற்றிமாவட்ட அளவிலான இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டியில், ராஜசேகர் மணி எம்.சி.சி., அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019- 20ம் ஆண்டு, 'யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேன்சர்ஸ்' கோப்பைக்கான, இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டி பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்தது. இதில், ஸ்ரீராபர்ட்ஸ் ஸ்டேன்ஸ் எம்.சி.சி., அணி, ராஜசேகர் மணி எம்.சி.சி., அணிகள் மோதின.முதலில் விளையாடிய ஸ்ரீராபர்ட்ஸ் ஸ்டேன்ஸ் அணி, 29.5 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 96 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ராஜசேகர் மணி எம்.சி.சி., அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 18.2 ஓவரில், 3 விக்கெட் இழப்புக்கு, 97 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கிரிக்கெட்; ரெயின்போ சி.சி., வெற்றிமாவட்ட அளவிலான முதல் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டியில், ரெயின்போ சி.சி., அணி, 40 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019- 20ம் ஆண்டு, 'லட்சுமி கார்டு குளோத்திங்' முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்தது.

இதில், ரெயின்போ பேட்ரியாட்ஸ் சி.சி., அணி, ஆறுமுகம் லெவன் சி.சி., அணிகள் மோதின.முதலில் விளையாடிய ரெயின்போ சி.சி., அணி, 49.4 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 153 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் சி.சி., அணியினர் எதிரணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 36.2 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 113 ரன் எடுத்து, 40 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அணியில் சிறப்பாக பந்து வீசிய சுரேஷ்குமார்-4, சக்திவேல்-3 விக்கெட்களை கைப்பற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X