பொது செய்தி

தமிழ்நாடு

நிலம் கையகப்படுத்தி சத்தி ரோட்டை அகலப்படுத்த நிதியிருக்கு... ரூ.38 கோடி நிதி ஒதுக்கியும் வேலை நடக்கவில்லை!-

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோவை : கோவை-சத்தி ரோட்டில், டெக்ஸ்டூல் பாலம் முதல் பழைய சத்தி ரோடு வரையிலான பகுதியை விரிவாக்கம் செய்வதற்குத் தேவைப்படும் நிலத்தைக் கையகப்படுத்த, ரூ.38 கோடி நிதி ஒதுக்கி, ஏழு மாதங்களாகியும் இதுவரை ஒரு வேலையும் நடக்கவில்லை.கோவை நகரிலுள்ள முக்கிய ரோடுகள் அனைத்தும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தேசிய நெடுஞ்சாலையான சத்தி ரோட்டை அகலப்படுத்துவது, கானல்நீராகவே

கோவை : கோவை-சத்தி ரோட்டில், டெக்ஸ்டூல் பாலம் முதல் பழைய சத்தி ரோடு வரையிலான பகுதியை விரிவாக்கம் செய்வதற்குத் தேவைப்படும் நிலத்தைக் கையகப்படுத்த, ரூ.38 கோடி நிதி ஒதுக்கி, ஏழு மாதங்களாகியும் இதுவரை ஒரு வேலையும் நடக்கவில்லை.

கோவை நகரிலுள்ள முக்கிய ரோடுகள் அனைத்தும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தேசிய நெடுஞ்சாலையான சத்தி ரோட்டை அகலப்படுத்துவது, கானல்நீராகவே தள்ளிக் கொண்டு போகிறது. அதிலும், கணபதியிலிருந்து சரவணம்பட்டி வரையிலான ரோடு, மிகக்குறுகலாக இருப்பதால், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் தீவிரமாகி வருகிறது.இதற்குத் தீர்வு காணும் வகையில்,மாநகராட்சியில் 2020 அக்.,12ல் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கணபதி வேலன் தியேட்டர் பகுதியிலிருந்து, சூர்யா மருத்துவமனை சந்திப்பு வரையிலான பகுதிகளில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், டெக்ஸ்டூல் பாலம் முதல் பழைய சத்தி ரோடு வரையிலும் ரோட்டை அகலப்படுத்தத் தேவைப்படும் நிலத்தைக் கையகப்படுத்த, உள்ளூர் திட்டக்குழுமம் நிதி ஒதுக்க வேண்டுமென்று அதில் கோரப்பட்டிருந்தது.இதற்கிடையிலுள்ள மூன்று சாலை சந்திப்புகளையும், சாலையையும் விரிவாக்கம் செய்யத் தேவையான தனியார் நிலங்களைக் கையகப்படுத்த, 38 கோடியே 64 லட்சத்து 81 ஆயிரத்து 827 ரூபாய் நிதி தேவை என்று, மாநகராட்சி உத்தேச மதிப்பீடு தயாரித்திருந்தது.அதை ஏற்று அத்தொகையை ஒதுக்கி, கடந்த பிப்.,11 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.அதற்குப் பின் ஏழு மாதங்களாகியும் இந்தப் பணியில், ஒரு இன்ச் கூட முன்னேற்றமில்லை. நிலம் கையகப்படுத்த வேண்டிய பொறுப்பு, வருவாய்த்துறையுடையது. மாநகராட்சி நிர்வாகம் இதற்கு முறைப்படி கடிதம் கொடுத்திருக்க வேண்டும்.நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டவுடனே இந்த கடிதத்தை மாநகராட்சி அனுப்பியிருக்கலாம்.இடையில் தேர்தல் வந்து விட்டது என்று காரணம் கூறினாலும், மே மாதத்துக்குப் பின் கடிதம் அனுப்பியிருந்தாலும், நிலம் கையகப்படுத்தும் வேலை ஓரளவுக்கு முடிந்திருக்கும்.

இப்போது வரை கடிதம் வரவில்லை என்று, சாலை பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் டி.ஆர்.ஓ., தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத்துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.மாநகராட்சி கடிதம் அனுப்பினால்தான் நிலம் கையகப்படுத்தப்படும். அதன்பின் சாலையோரம், சந்திப்புகள் விரிவாக்கம் செய்யப்படும்.இந்தப் பணி முடிந்த பின்பே, உயர் மட்டப்பாலம் கட்டுவதற்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் நிதியில்லை என்று 100 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை, மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மற்றொரு புறத்தில், உள்ளூர் திட்டக்குழுமத்திலிருந்து, ரூ.38 கோடி நிதி ஒதுக்கி ஏழு மாதங்களாகியும் ஒரு கடிதம் அனுப்பாமல், வளர்ச்சிப் பணிக்கு முட்டுக்கட்டையாகவுள்ளது.இது பற்றி மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலிடம் கேட்டபோது, ''நிலம் கையகப்படுத்துவதற்கான அட்டவணை தயார் செய்யப்பட்டு, ஒரு மாதத்தில் கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X