சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் திருடர்கள் கைது

Added : செப் 09, 2021
Share
Advertisement
மாதவரம்-கடையின் பூட்டை உடைத்து, மொபைல் போன்கள் திருடியோர் கைதாகினர்.சென்னை மாதவரம் பால்பண்ணை அடுத்த மூலசத்திரம், மீனாட்சி கூட்டுறவு நகரைச் சேர்ந்தவர் சரவணன், 26. இதே பகுதி சாய்பாபா நகரில், மொபைல் போன் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். ஜூலை 30ம் தேதி இரவு, இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, 4 மொபைல் போன்கள் திருடு போயின. எண்ணுார் நேரு நகர், பூங்கா தெருவைச் சேர்ந்த அப்துல்

மாதவரம்-கடையின் பூட்டை உடைத்து, மொபைல் போன்கள் திருடியோர் கைதாகினர்.சென்னை மாதவரம் பால்பண்ணை அடுத்த மூலசத்திரம், மீனாட்சி கூட்டுறவு நகரைச் சேர்ந்தவர் சரவணன், 26. இதே பகுதி சாய்பாபா நகரில், மொபைல் போன் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். ஜூலை 30ம் தேதி இரவு, இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, 4 மொபைல் போன்கள் திருடு போயின. எண்ணுார் நேரு நகர், பூங்கா தெருவைச் சேர்ந்த அப்துல் ரகுமான், 37, கடந்த மாதம் 9ம் தேதி இரவு, கொசப்பூர் சுங்கச்சாவடி அருகே, மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார். இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது மொபைல் போனை தட்டிப் பறித்துச் சென்றனர்.மேற்கண்ட புகார்கள் குறித்து, மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரித்ததில், வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்த முகமது முஸ்தபா, 20, ஜமீர், 19, ஆகியோர் சிக்கினர். அவர்களை நேற்று முன்தினம் இரவு கைது செய்த போலீசார், மூன்று மொபைல் போன், 1 இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X