பொது செய்தி

தமிழ்நாடு

குப்பையில் உரம் தயாரிக்கும் மையங்கள் 35 இடங்களில் கட்டும் திட்டம் 'கேன்சல்'

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோவை : கோவையில், 35 இடங்களில் மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் மையம் கட்டும் திட்டத்தை, மாநகராட்சி கைவிட்டது.கோவை மாநகராட்சியில் உருவாகும் குப்பை, வெள்ளலுார் கிடங்கில் கொட்டப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதித்ததால், ம.தி.மு.க., இளைஞரணி மாநில செயலாளர் ஈஸ்வரன், 2013ல், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதற்கு, கிடங்கிற்கு வரும் குப்பை அளவு பாதியாக குறைக்கப்படும்;

கோவை : கோவையில், 35 இடங்களில் மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் மையம் கட்டும் திட்டத்தை, மாநகராட்சி கைவிட்டது.கோவை மாநகராட்சியில் உருவாகும் குப்பை, வெள்ளலுார் கிடங்கில் கொட்டப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதித்ததால், ம.தி.மு.க., இளைஞரணி மாநில செயலாளர் ஈஸ்வரன், 2013ல், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதற்கு, கிடங்கிற்கு வரும் குப்பை அளவு பாதியாக குறைக்கப்படும்; தரம் பிரித்து கொண்டு வரப்படும். உருவாகும் இடத்திலேயே அழிக்க, 69 இடங்களில் உரம் தயாரிக்கும் மையம் கட்டப்படும். பழைய குப்பை, இரு ஆண்டுக்குள் அழிக்கப்படும் என, மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இப்பணியை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.பழைய குப்பையை விஞ்ஞான பூர்வமாக அழிக்க, 'பயோமைனிங்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் மையங்கள், 69 இடங்களில் கட்டுவதற்கு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ரூ.43.98 கோடி ஒதுக்கப்பட்டது.தினமும், 5 டன் குப்பை கையாளும் மையம், 59 இடங்களிலும், 2 டன் குப்பை கையாளும் மையம், 10 இடங்களிலும் கட்டப்படும் என, உறுதி அளிக்கப்பட்டது.இதில், 30 இடங்களில் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது;

4 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இதிலும், 12 இடங்களில் மட்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. தொழிலாளர் பிரச்னை, பணம் பட்டுவாடா நிறுத்தி வைப்பு போன்ற காரணங்களால், 5 மையங்கள் செயல்படவில்லை. தற்போதைக்கு, 7 மையங்களே இயங்குகின்றன.பொதுமக்கள் எதிர்ப்பு, இடம் தேர்வு செய்வதில் பிரச்னை, மறுடெண்டர் கோருவது உள்ளிட்ட காரணங்களால், 35 இடங்களில் கட்டுமான பணி துவங்காமல் இருந்தது. இப்பணிகள், 'ஸ்மார்ட் சிட்டி' இயக்குனரவை கூட்டத்தில் ரத்து செய்யப்பட்டன.'பிரச்னை பற்றிய புரிதல் இல்லை' ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், ''குப்பை உருவாகும் இடத்தில் அழிக்க, 69 இடங்களில் உரம் தயாரிக்கும் மையம் கட்டுவதாக, பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி உறுதியளித்திருக்கிறது. வெள்ளலுார் கிடங்கு பிரச்னை தொடர்பான புரிதல் இல்லாமல், ரத்து செய்துள்ளது. இப்பிரச்னை பசுமை தீர்ப்பாயம் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X