பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்றுமதியை ஈர்க்கும் பி.எல்.ஐ., திட்டம்; ஐ.டி.எப்., வரவேற்பு

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோவை : வெளிநாட்டு நிறுவனங்களின் ஏற்றுமதியை ஈர்க்கும், உற்பத்தி அடிப்படையில் ஊக்கச் சலுகை திட்டத்துக்கு, ஐ.டி.எப்., வரவேற்பு தெரிவித்துள்ளது.இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு(ஐ.டி.எப்.,) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:உலகம் முழுவதும் செயற்கை பஞ்சு கலந்த ஆடைகளுக்கு, தேவை அதிகம் உள்ளது. அதை நம் நாட்டிலும் ஊக்குவிக்கும் விதமாக, உற்பத்தி அடிப்படையில் ஊக்கச்

கோவை : வெளிநாட்டு நிறுவனங்களின் ஏற்றுமதியை ஈர்க்கும், உற்பத்தி அடிப்படையில் ஊக்கச் சலுகை திட்டத்துக்கு, ஐ.டி.எப்., வரவேற்பு தெரிவித்துள்ளது.

இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு(ஐ.டி.எப்.,) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:உலகம் முழுவதும் செயற்கை பஞ்சு கலந்த ஆடைகளுக்கு, தேவை அதிகம் உள்ளது. அதை நம் நாட்டிலும் ஊக்குவிக்கும் விதமாக, உற்பத்தி அடிப்படையில் ஊக்கச் சலுகை வழங்கும், மத்திய அரசின் திட்டம்(பி.எல்.ஐ.,) வரவேற்கத்தக்கது.இத்திட்டத்தில், ரூ.100 கோடி, 300 கோடி என இரு பிரிவுகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கச்சலுகை வழங்க, ஐந்து ஆண்டுகளுக்கு, 10 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, சர்வதேச நாடுகளுடன் போட்டித்திறனை அதிகரித்து, பெரிய அளவில் ஏற்றுமதி ஆர்டர்களை அதிகரிக்க முடியும்.செயற்கை பஞ்சு கலந்த துணி வகைகள், இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இதற்கான முதலீடுகள் வருவதுடன், நிறுவன விரிவாக்கமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X