பொது செய்தி

தமிழ்நாடு

1,500 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்! பங்கேற்க வருமாறு கோவை கலெக்டர் அழைப்பு

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாவட்டத்தில் வரும் 12ம் தேதி, 1,500 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இம்முகாமில் பங்கேற்க வருமாறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை, தடுப்பூசி போடும் முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.


கோவை : கோவை மாவட்டத்தில் வரும் 12ம் தேதி, 1,500 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இம்முகாமில் பங்கேற்க வருமாறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை, தடுப்பூசி போடும் முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை 27 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.மீதமுள்ளவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடும் நோக்கத்துடன், வரும் 12ல் மெகா தடுப்பூசி முகாம் மாவட்டத்தில், 1,500 இடங்களில் நடத்தப்படுகிறது.இது தொடர்பாக நடந்த அலுவலர்கள், தொண்டு நிறுவனத்தினர் ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் சமீரன் பேசியதாவது:மெகா தடுப்பூசி முகாமை முன்னிட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகள், மலைப்பகுதிகள், போக்குவரத்து வசதியற்ற பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதிகளிலும், சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

அன்று காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை முகாம்கள் நடத்தப்படும். இம்முகாமில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை செலுத்த தகுதியுள்ள நபர்கள் பயன் பெறலாம்.முகாம்களுக்கு ஸ்பான்சர் வழங்க தயாராக உள்ள தொண்டு நிறுவனம், அமைப்புகள், நிறுவனங்கள் 93427 53523 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தகவல் அனுப்பலாம். முகாமில் ஒன்றரை லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்தார்.மாநகராட்சியில் பத்து இடங்கள்!கோவை மாநகராட்சி பகுதியில் மண்டலத்துக்கு ஒன்று வீதம், 5 மொபைல் டீம், பஸ் ஸ்டாண்ட்கள், ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையம், வ.உ.சி., பூங்கா, மைதானம், நேரு ஸ்டேடியம் சுற்றுவட்டார பகுதிகளில், 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.வீடு வீடாகச் செல்லும் களப்பணியாளர்கள், இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள், இரண்டாவது டோஸ் செலுத்தாதவர்கள் விபரங்கள் சேகரிக்க, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

வரும், 12ல் காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை, முகாம் நடத்தப்படும். போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவது போல், அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடுவதற்கு, மாநகராட்சி இலக்கு நிர்ணயித்திருக்கிறது.அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கத்தினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் சிறப்பு முகாம் நடத்த விரும்பினால், கோவை மாநகராட்சி சுகாதாரப் பிரிவை தொடர்பு கொள்ளலாம்.முகாம் ஏற்பாடுகளை துரிதப்படுத்த, மாநகராட்சி செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்களுக்கு, நகர் நல அலுவலர் சதீஷ்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X