பொது செய்தி

தமிழ்நாடு

தங்க கட்டி பெற்று மோசடி  ஊழியர் மீது வழக்கு பதிவு

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோவை : கோவை, ஆர்.எஸ்.புரம், ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் மோகனன், 48. அதே பகுதியில் தங்க நகை பட்டறை வைத்துள்ளார். இவரது பட்டறையில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர், பணியாற்றி வருகிறார்.இவரிடம் கடந்த, 12ம் தேதி, 250 கிராம் தங்க கட்டியை கொடுத்து நகையாக செய்ய உரிமையாளர் சொன்னார். ஆனால், நகையை செய்து கொடுக்காமல், ஊழியர் பல்வேறு காரணங்களை சொல்லி காலம் தாழ்த்தி வந்தார்.சில

கோவை : கோவை, ஆர்.எஸ்.புரம், ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் மோகனன், 48. அதே பகுதியில் தங்க நகை பட்டறை வைத்துள்ளார்.

இவரது பட்டறையில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர், பணியாற்றி வருகிறார்.இவரிடம் கடந்த, 12ம் தேதி, 250 கிராம் தங்க கட்டியை கொடுத்து நகையாக செய்ய உரிமையாளர் சொன்னார். ஆனால், நகையை செய்து கொடுக்காமல், ஊழியர் பல்வேறு காரணங்களை சொல்லி காலம் தாழ்த்தி வந்தார்.சில நாட்களுக்கு முன், உறவினர் இறந்து விட்டதாக சொந்த ஊர் சென்று திரும்பியவர், 80 கிராம் தங்கத்தை மட்டும் திருப்பிக்கொடுத்தார். ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 170 கிராம் தங்கத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தார்.புகாரின்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார், ஊழியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X