மூன்றடுக்கில் ஆக்கிரமிக்கும் நெல் லாரிகள் ஜி.என்.டி., சாலையில் தொடருது நெரிசல்

Added : செப் 09, 2021
Share
Advertisement
செங்குன்றம்-நெல் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகள், ஜி.என்.டி., சாலையை மூன்றடுக்கில் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது.சென்னை செங்குன்றத்தில் நெல், அரிசி மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை சந்தைகள் உள்ளன. அவற்றுக்கு திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து தினமும் லாரி, டிராக்டர் உட்பட, 100க்கும் அதிகமான வாகனங்கள்,
 மூன்றடுக்கில் ஆக்கிரமிக்கும் நெல் லாரிகள் ஜி.என்.டி., சாலையில் தொடருது நெரிசல்

செங்குன்றம்-நெல் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகள், ஜி.என்.டி., சாலையை மூன்றடுக்கில் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது.சென்னை செங்குன்றத்தில் நெல், அரிசி மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை சந்தைகள் உள்ளன. அவற்றுக்கு திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து தினமும் லாரி, டிராக்டர் உட்பட, 100க்கும் அதிகமான வாகனங்கள், நெல் ஏற்றிக்கொண்டு வருகின்றன.அலட்சியம்போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அவற்றை நிறுத்த நெல், அரிசி மொத்த வியாபாரிகள், இதுவரை தனி இடத்தை ஏற்பாடு செய்யவில்லை. அதனால், அந்த லாரிகள் அனைத்தும், 1.5 கி.மீ., துாரத்திற்கு செங்குன்றம் ஜி.என்.டி., சாலையில் நிறுத்தப்படுகின்றன.அதிலும், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு, சாலையை ஆக்கிரமித்து மூன்று வரிசையில் நிறுத்தப்படுகின்றன.மேலும், நெல் இறக்கிய காலி லாரிகளும் நிறுத்தப்படுகின்றன. அதை, செங்குன்றம் போலீசார் மட்டுமின்றி, போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை.இதனால், உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், மாநகர பேருந்துகள் என, மற்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன.செங்குன்றத்தில் இணைப்பு சாலைகளில் இருந்து, ஜி.என்.டி., சாலைக்கு வரும் வாகனங்களும் விதிவிலக்கின்றி, விபத்தில் சிக்கிக்கொள்கின்றன.இப்போது பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ -- மாணவியர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட பள்ளி, கல்லுாரி அலுவலர்களும், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தில் சிக்கி பாதிக்கப்படும் நிலை உள்ளது.தீர்வுஅதற்கு காரணம், ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் லாரி, டிராக்டர்களை இயக்குவது தான்.போக்குவரத்து போலீசாரும், இந்த பிரச்னைக்கு தீர்வு காண, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில்லை. ஓரிரு லாரிகளுக்கு அபராதம் விதித்து, வழக்கு பதிவு செய்வதுடன் கடமையை முடித்துக் கொள்கின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நெல் லாரிகளை ஒரே வரிசையில் நிறுத்தினால், அரசு மற்றும் மாநகர பேருந்துகளின், பொது போக்குவரத்துக்கு இடையூறு இருக்காது. காலியான லாரி, வேன்களை ஊருக்கு வெளியே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாலையை ஆக்கிரமித்து, சரக்கு வாகனங்களில் வைத்து பழம், காய்கறி விற்கும் ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும்.பேருந்து பயணியர் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஆட்டோக்களையும், குறிப்பிட்ட இடங்களில் நிறுத்த வேண்டும். இப்படி செய்வதால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.பிரியாணி கடைகளால் விபத்துசெங்குன்றம், காமராஜர் சிலை முதல் திருவள்ளூர் கூட்டுச்சாலை வரையில் உள்ள சிறிய, பெரிய ஓட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களும், சாலையை ஆக்கிரமித்தே வாகனங்களை நிறுத்துகின்றனர்.குறிப்பாக, திருவள்ளூர் கூட்டுச்சாலையில் உள்ள பிரியாணி ஓட்டல்களால் கடுமையான போக்குவரத்து ஏற்படுகிறது. அவற்றுக்கு வரும் வாகனங்களால், திருவள்ளூர் கூட்டுச்சாலையில் நெரிசலும் விபத்தும் தொடர்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X