பொது செய்தி

தமிழ்நாடு

நீங்களே சொல்லுங்க... எப்படி ஏற்றுமதி செய்யறது? 'கன்டெய்னர்' தட்டுப்பாடு; கட்டணமும் மும்மடங்கு

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோவை : சரக்கு போக்குவரத்து கட்டணம் உயர்வுடன், 'கன்டெய்னர்' தட்டுப்பாடும் நிலவுவதால் வெளிநாடுகளுக்கு இன்ஜினியரிங் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.கோவையில் மோட்டார் பம்ப் செட், இன்ஜினியரிங் என பல்துறை சார்ந்த பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் மோட்டார் பம்ப் செட்களில் பாதியளவு, தமிழகத்தில்

கோவை : சரக்கு போக்குவரத்து கட்டணம் உயர்வுடன், 'கன்டெய்னர்' தட்டுப்பாடும் நிலவுவதால் வெளிநாடுகளுக்கு இன்ஜினியரிங் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் மோட்டார் பம்ப் செட், இன்ஜினியரிங் என பல்துறை சார்ந்த பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் மோட்டார் பம்ப் செட்களில் பாதியளவு, தமிழகத்தில் இருந்துதான் உற்பத்தி செய்யப்படுகின்றன.தொழில் நகரான கோவையில் இருந்து, துாத்துக்குடி, கொச்சி துறைமுகங்களுக்கு தயாரிப்பு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கப்பல்கள் மூலம் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.கொரோனா ஊரடங்கு காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஏற்றுமதி தடை செய்யப்பட்டிருந்தது.

தற்போது, இயல்பு நிலை காரணமாக மீண்டும் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி நடந்து வருகிறது.இச்சூழலில், பொருட்களை கப்பல்களில் கொண்டு செல்வதற்கான, கன்டெய்னர் தட்டுப்பாட்டால், ஏற்றுமதியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க(சீமா) தலைவர் கார்த்திக் கூறியதாவது:கோவையில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு மோட்டார் பம்ப் செட், பொறியியல் பொருட்கள் அதிகம் ஏற்றுமதியாகின்றன. ஆண்டுதோறும், 1,000 கோடிக்கு மோட்டார் பம்ப் செட் ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது.இந்நிலையில், கப்பல்களில் சரக்கு போக்குவரத்து கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக, ஒரு கிலோவுக்கு, 100 ரூபாய் என்பது, 400 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது. கன்டெய்னர் தட்டுப்பாடும் குறிப்பிட்ட நேரத்திலான ஏற்றுமதிக்கு, முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X