சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யுனானி 'கிளினிக்'கிற்கு அதிகாரிகள் 'சீல்'

Added : செப் 09, 2021
Share
Advertisement
கொடுங்கையூர்,--சென்னை கொடுங்கையூர், சின்னாண்டி மடத்தைச் சேர்ந்தவர் அனீஷ் அகமது, 52. இவர் இரண்டு ஆண்டுகளாக, அங்கு யுனானி 'கிளினிக்' வைத்து, ஆங்கில மருத்துவம் மற்றும் யுனானி மருத்துவம் பார்த்து வந்தார்.இதுகுறித்து அப்பகுதி மக்கள், ஊரக நலப்பணி இயக்குனருக்கு கடிதம் வாயிலாக புகார் அளித்தனர். இதன்படி ஊரக நலப்பணி இணை இயக்குனர் விஸ்வநாதன், முத்துராமலிங்கம் தலைமையிலான

கொடுங்கையூர்,--சென்னை கொடுங்கையூர், சின்னாண்டி மடத்தைச் சேர்ந்தவர் அனீஷ் அகமது, 52. இவர் இரண்டு ஆண்டுகளாக, அங்கு யுனானி 'கிளினிக்' வைத்து, ஆங்கில மருத்துவம் மற்றும் யுனானி மருத்துவம் பார்த்து வந்தார்.இதுகுறித்து அப்பகுதி மக்கள், ஊரக நலப்பணி இயக்குனருக்கு கடிதம் வாயிலாக புகார் அளித்தனர். இதன்படி ஊரக நலப்பணி இணை இயக்குனர் விஸ்வநாதன், முத்துராமலிங்கம் தலைமையிலான 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள், நேற்று யுனானி கிளினிக்கில் ஆய்வு செய்தனர்.இதில், அனீஸ் அகமது ஆங்கில மருத்துவம் படிக்காததும், யுனானி மருத்துவம் படித்துவிட்டு முறையாக பதிவு செய்யாததும் தெரிந்தது.இதையடுத்து, அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட ஊசிகள் மற்றும் மாத்திரை அட்டைகளை பறிமுதல் செய்து, கிளிக்கை பூட்டி 'சீல்' வைத்தனர். அத்துடன், அனீஷ் அகமது மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X