பொது செய்தி

தமிழ்நாடு

பொழுதுபோக்கு தலமாகும் சாத்தாங்காடு ஏரி

Added : செப் 09, 2021
Share
Advertisement
மணலி-“சாத்தாங்காடு ஏரி புனரமைக்கப்பட்டு, விரைவில் பொழுதுபோக்கு தலமாக மாறும்,” என, வடசென்னை எம்.பி., கலாநிதி நம்பிக்கை தெரிவித்தார்.சென்னை, திருவொற்றியூரில் நடந்து வரும் சாத்தாங்காடு ஏரி புனரமைப்பு உள்ளிட்ட பல திட்டப் பணிகளை, வடசென்னை எம்.பி., கலாநிதி, நேற்று மதியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின், அவர் அளித்த பேட்டி:திருவொற்றியூர் சாத்தாங்காடு ஏரி, 70 ஏக்கரில் உள்ளது.

மணலி-“சாத்தாங்காடு ஏரி புனரமைக்கப்பட்டு, விரைவில் பொழுதுபோக்கு தலமாக மாறும்,” என, வடசென்னை எம்.பி., கலாநிதி நம்பிக்கை தெரிவித்தார்.சென்னை, திருவொற்றியூரில் நடந்து வரும் சாத்தாங்காடு ஏரி புனரமைப்பு உள்ளிட்ட பல திட்டப் பணிகளை, வடசென்னை எம்.பி., கலாநிதி, நேற்று மதியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின், அவர் அளித்த பேட்டி:திருவொற்றியூர் சாத்தாங்காடு ஏரி, 70 ஏக்கரில் உள்ளது. பராமரிப்பின்றி இருந்த நிலையில், தனியார் நிறுவன சமூக மேம்பாட்டு நிதியின் கீழ், ஒரு வருடமாக ஏரி புனரமைக்கப்பட்டு வருகிறது.நான்குபுறம் கரை அமைத்து, நீர்த்தேக்க நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில், நடைபாதை உள்ளிட்ட அம்சங்களுடன் சுற்றுவட்டார மக்களின் நல்ல பொழுதுபோக்கு தலமாக, சாத்தாங்காடு ஏரி மாறும்.வட சென்னையில் பூங்கா, கேந்திரியா வித்யாலயா பள்ளி அமைக்க, பல இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம் பகுதிகளில், அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.அவர்கள் வாழ்வு மேம்பட, விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் கால்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்டவை அடங்கிய, திறந்தவெளி விளையாட்டு மைதானம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தவிர, 25 ஏக்கரில், ஸ்டேடியம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.திருவொற்றியூர் - மணலியை இணைக்கும் பகிங்ஹாம் கால்வாய் மேம்பாலப் பணிகள், விரைவாக நடந்து வருகின்றன. இன்னும், நான்கு மாதங்களில் முடியும்.திருவொற்றியூர் கல்லுாரிக்கான நிரந்தர கட்டடம் குறித்து, உயர்கல்வித்துறை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வில், தி.மு.க., கிழக்கு பகுதி செயலர் தனியரசு, திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் பால்தங்கதுரை, மணலி மண்டல உதவி கமிஷனர் சசிகலா, செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X