சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் ஓட்டுனர் திடீர் மரணம்

Added : செப் 09, 2021
Share
Advertisement
திருவொற்றியூர்-மாநகர பேருந்து ஓட்டுனர், பணியின் போது திடீரென உயிரிழந்தார்.சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் - சின்ன எர்ணாவூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 55; மாநகர பேருந்து ஓட்டுனர். நேற்று மதியம் செங்குன்றம் - திருவொற்றியூர் பணிமனை செல்லும் தடம் எண் '36வி' பேருந்தை இயக்கினார்.மறு மார்க்கம் செல்வதற்கு முன், வீட்டிற்கு சாப்பிட வந்தார். சாப்பிட்ட போது திடீரென மயங்கி

திருவொற்றியூர்-மாநகர பேருந்து ஓட்டுனர், பணியின் போது திடீரென உயிரிழந்தார்.சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் - சின்ன எர்ணாவூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 55; மாநகர பேருந்து ஓட்டுனர். நேற்று மதியம் செங்குன்றம் - திருவொற்றியூர் பணிமனை செல்லும் தடம் எண் '36வி' பேருந்தை இயக்கினார்.மறு மார்க்கம் செல்வதற்கு முன், வீட்டிற்கு சாப்பிட வந்தார். சாப்பிட்ட போது திடீரென மயங்கி சரிந்து விழுந்தார்.உறவினர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, விஸ்வநாதனை பரிசோதித்த மருத்துவர்கள், இறந்து விட்டதாகக் கூறினர். திருவொற்றியூர் போலீசார் உடலைக் கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.முதற்கட்ட விசாரணையில், மாரடைப்பால் இறந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். இவருக்கு லலிதா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X