பொது செய்தி

தமிழ்நாடு

கடன் வரையறையை உயர்த்திட கோரிக்கை

Added : செப் 09, 2021
Share
Advertisement
கோவை : சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் கடன் வரையறையை, 100 கோடி ரூபாயாக உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.கோவை தொழில் அமைப்புகளின் கூட்டுக்குழு அறிக்கை:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் நாராயண் டாட்டு ரானே உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளன. அதில், அனைத்து சிறு,

கோவை : சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் கடன் வரையறையை, 100 கோடி ரூபாயாக உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டுக்குழு அறிக்கை:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் நாராயண் டாட்டு ரானே உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளன. அதில், அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன் பெறும் வகையில், கடன் தொகை மறுசீரமைப்பின்போது தற்போது உள்ள அளவான, ரூ.50 கோடி என்ற வரையறையை, 100 கோடியாக உயர்த்த வேண்டும். கடன் கட்டுவதற்கான கால நீட்டிப்பான இவ்வாண்டு மார்ச் 31 என்பதை, வரும் 2022ம் ஆண்டு செப்., 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளோம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X