தமிழ்நாடு

உரக்கிடங்கில் காய்கறி தோட்டம்; அசத்தும் அனகாபுத்தூர் நகராட்சி

Added : செப் 09, 2021
Share
Advertisement
அனகாபுத்துார்--அனகாபுத்துார் நகராட்சி, உரக்கிடங்கில் காலியாக உள்ள இடத்தில், காய்கறி தோட்டம் அமைத்து, வெண்டை, கீரை வகைகளை விளைச்சல் செய்து வருகின்றனர்.அனகாபுத்துார் நகராட்சி, 18 வார்டுகளை கொண்டது. வார்டுகளில் இருந்து, தினமும், 13 டன் குப்பை சேகரமாகிறது. இந்த குப்பை கழிவுகள், நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள அரசு இடத்தில் கொட்டப்பட்டு வந்தன.தற்போது, குப்பை கொட்டுவது
 உரக்கிடங்கில் காய்கறி தோட்டம்; அசத்தும் அனகாபுத்தூர் நகராட்சி

அனகாபுத்துார்--அனகாபுத்துார் நகராட்சி, உரக்கிடங்கில் காலியாக உள்ள இடத்தில், காய்கறி தோட்டம் அமைத்து, வெண்டை, கீரை வகைகளை விளைச்சல் செய்து வருகின்றனர்.

அனகாபுத்துார் நகராட்சி, 18 வார்டுகளை கொண்டது. வார்டுகளில் இருந்து, தினமும், 13 டன் குப்பை சேகரமாகிறது. இந்த குப்பை கழிவுகள், நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள அரசு இடத்தில் கொட்டப்பட்டு வந்தன.தற்போது, குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டு, பசுமை உரக்கிடங்கு மூலம் உரம் தயாரிக்கப்படுகிறது. இரண்டு உரக்கிடங்குகள் கட்டப்பட்டு, உரம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.அதே நேரத்தில், உரக்கிடங்கில் காலியாக உள்ள, 50 சென்ட் இடத்தில், இயற்கை உரத்தை பயன்படுத்தி, காய்கறி தோட்டம் அமைத்துள்ளனர். அதில், வெண்டை, கீரை வகைகள், கத்தரி, முள்ளங்கி, தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர்.தோட்டத்தை, துப்புரவு ஊழியர்கள் பராமரிக்கின்றனர். இங்கு விளையும் வெண்டை, கீரை வகைகளை துப்புரவு ஊழியர்களுக்கும், குறைந்த விலையில் பொதுமக்களுக்கும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

காலியாக உள்ள இடத்தில் காய்கறி தோட்டம் அமைத்து, பராமரித்து வருவது, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல், மற்ற நகராட்சிகளிலும், காய்கறி தோட்டம் அமைத்தால், இயற்கை உரம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X