பொது செய்தி

தமிழ்நாடு

காவல் நிலையத்தை புனரமைக்கும் போலீசார்

Added : செப் 09, 2021
Share
Advertisement
குன்றத்துார்--குன்றத்துார் காவல் நிலைய கட்டடத்தை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது.குன்றத்துாரில், குன்றத்துார்- - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், உழவர் சந்தை அருகே குன்றத்துார் காவல் நிலையம் இயங்கி வருகிறது. மொத்தம், 1.95 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தின் ஒரு பகுதியில், 1983ம் ஆண்டு முதல், காவல் நிலையம் உள்ளது.இந்த கட்டடத்தில், வரவேற்பறை, சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு

குன்றத்துார்--குன்றத்துார் காவல் நிலைய கட்டடத்தை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது.குன்றத்துாரில், குன்றத்துார்- - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், உழவர் சந்தை அருகே குன்றத்துார் காவல் நிலையம் இயங்கி வருகிறது. மொத்தம், 1.95 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தின் ஒரு பகுதியில், 1983ம் ஆண்டு முதல், காவல் நிலையம் உள்ளது.இந்த கட்டடத்தில், வரவேற்பறை, சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அறை, கைதிகள் மற்றும் ஆவணவங்கள் பாதுகாப்பு அறை போன்ற வசதிகள் உள்ளன. காவல் நிலையம் இயங்கி வரும் கட்டடம், 38 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பதால், மெல்ல வலுவிழந்து வருகிறது. மழை காலத்தில், கட்டடத்திற்குள் மழை நீர் ஒழுகுகிறது.நுழைவாயில் முன் வெள்ளம் தேங்குகிறது. அதுபோன்ற நேரத்தில், காவலர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், போலீசாரே முயற்சி எடுத்து, கட்டடத்தை புனரமைத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X