சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா கடத்தல் முதியவருக்கு 'காப்பு'

Added : செப் 09, 2021
Share
Advertisement
வேளச்சேரி--ஆந்திராவில் இருந்து, தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்திய முதியவரை, போலீசார் கைது செய்தனர்.வேளச்சேரி, ராம் நகர் 8வது தெருவில் நின்ற, 65 வயது முதியவரிடம், வேளச்சேரி ரோந்து போலீசார் விசாரித்தனர். அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், அவர் வைத்திருந்த பையை, போலீசார் சோதனை செய்தனர். அதில், 7 கிலோ கஞ்சா இருந்தது. போலீசார் விசாரணையில், அவர், தேனி மாவட்டம்,

வேளச்சேரி--ஆந்திராவில் இருந்து, தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்திய முதியவரை, போலீசார் கைது செய்தனர்.வேளச்சேரி, ராம் நகர் 8வது தெருவில் நின்ற, 65 வயது முதியவரிடம், வேளச்சேரி ரோந்து போலீசார் விசாரித்தனர். அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், அவர் வைத்திருந்த பையை, போலீசார் சோதனை செய்தனர். அதில், 7 கிலோ கஞ்சா இருந்தது. போலீசார் விசாரணையில், அவர், தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த பாண்டியன், 65, என தெரிந்தது. போலீசார், அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறுகையில், ''பாண்டியன் இவரது மகன் முருகன், 40 போதை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். மாதந்தோறும், மகனை பார்க்க, பாண்டியன், சென்னை வருவது வழக்கம். வரும் போது, ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி, தேனி மாவட்டத்தில் விற்பனை செய்ய கொண்டு செல்வார். இந்த முறை சிக்கி கொண்டார்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X